• May 10 2024

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா! நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு samugammedia

Chithra / Nov 22nd 2023, 9:09 am
image

Advertisement

 

எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாதீட்டு முன்மொழிவுகளில் இவை நேரடியாக குறிப்பிடப்படாத போதிலும், மதிப்பீட்டு ஆவணங்களில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2003ஆம் ஆண்டின் அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறை, 5 சதவீதமாக பேணப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மாத்திரமே பாதீட்டு பற்றாக்குறையை 5 சதவீதமாக பேண முடிந்தது.

தொடர்ச்சியாக அதனைப் பேண வேண்டுமாயின், பாரிய அளவில் அரச செலவுகளைக் குறைத்து அரசாங்கம் வருமானம் ஈட்ட வேண்டியது அவசியமாகும்.

65 பில்லியனாக இருந்த அரச நலன்புரிச் செலவு, இந்த ஆண்டு சுமார் 209 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.

அரசின் ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டில் நிலவிய நம்பிக்கையற்ற நிலையை, மிகக் குறுகிய காலத்தில் இல்லாமலாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பணவீக்க அதிகரிப்பு வேகத்தைக் கட்டுப்படுத்த அவசியமான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது.

இதன்போது, இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் கடன் வழங்கும் நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபா நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு samugammedia  எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்தல்களுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பாதீட்டு முன்மொழிவுகளில் இவை நேரடியாக குறிப்பிடப்படாத போதிலும், மதிப்பீட்டு ஆவணங்களில் அவை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 2003ஆம் ஆண்டின் அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறை, 5 சதவீதமாக பேணப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.கடந்த 20 வருடங்களில், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மாத்திரமே பாதீட்டு பற்றாக்குறையை 5 சதவீதமாக பேண முடிந்தது.தொடர்ச்சியாக அதனைப் பேண வேண்டுமாயின், பாரிய அளவில் அரச செலவுகளைக் குறைத்து அரசாங்கம் வருமானம் ஈட்ட வேண்டியது அவசியமாகும்.65 பில்லியனாக இருந்த அரச நலன்புரிச் செலவு, இந்த ஆண்டு சுமார் 209 பில்லியனாக உயர்வடைந்துள்ளது.அரசின் ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டில் நிலவிய நம்பிக்கையற்ற நிலையை, மிகக் குறுகிய காலத்தில் இல்லாமலாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஊழல் தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பணவீக்க அதிகரிப்பு வேகத்தைக் கட்டுப்படுத்த அவசியமான பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூடவுள்ளது.இதன்போது, இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாம் தவணையை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.இந்த வருட இறுதிக்குள் கடன் வழங்கும் நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement