• Nov 26 2024

டிக்டொக் ஊடாக மோட்டார் சைக்கிள் பந்தயம் - பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 12 இளைஞர்கள்!

Chithra / Sep 16th 2024, 12:18 pm
image


கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற 6 இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்டொக் ஊடாக இந்த மோட்டார் சைக்கிள் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது. 

119 பொலிஸ் அவசர அழைப்பு நிலையம் மற்றும் பிலியந்தலை பொலிஸ் ஊடாக கிடைத்த தொடர் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில்  பத்து பொலிஸ் அதிகாரிகள் குழு அங்கு சென்று குறித்த இளைஞர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலை முதல் நள்ளிரவு வரை பெருமளவிலான முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வீதியில் அதிக சத்தம் எழுப்பி வருவதாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

டிக்டொக் ஊடாக மோட்டார் சைக்கிள் பந்தயம் - பொலிஸாரிடம் வசமாக சிக்கிய 12 இளைஞர்கள் கெஸ்பேவ பகுதி மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற 6 இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.டிக்டொக் ஊடாக இந்த மோட்டார் சைக்கிள் பந்தயம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவருகின்றது. 119 பொலிஸ் அவசர அழைப்பு நிலையம் மற்றும் பிலியந்தலை பொலிஸ் ஊடாக கிடைத்த தொடர் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில்  பத்து பொலிஸ் அதிகாரிகள் குழு அங்கு சென்று குறித்த இளைஞர்களை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாலை முதல் நள்ளிரவு வரை பெருமளவிலான முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வீதியில் அதிக சத்தம் எழுப்பி வருவதாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement