• May 06 2024

ரீயூனியன் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள்!

Chithra / Jan 26th 2023, 3:04 pm
image

Advertisement

பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவுக்குள் சட்டவிரோதமான பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38  இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். 

கடந்த ஜனவரி 14 ஆம் திகதி இந்த இலங்கையர்கள் குழு, ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2022 டிசம்பர் முதலாம் திகதி 5 பணியாளர்களுடன் பலநாள் மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம், பத்தலங்குண்டுவில் இருந்து 64 இலங்கையர்களை சட்டவிரோதமான ஏற்றிச் சென்றுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து, பலநாள் மீன்பிடி படகு டியாகோ கார்சியா தீவை நோக்கிச் சென்றது. அங்கு அவர்கள் டிசம்பர் 30 ஆம் திகதி பிரித்தானியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

அதன்பிறகு, ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த குழுவுடன் பிரான்ஸின் அதிகாரத்தின் கீழுள்ள ரீயூனியன் தீவுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஜனவரி 14 ஆம் திகதி ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ரீயூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் நேற்று புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கற்பிட்டி மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள ஆட் கடத்தல்காரர்கள், ஒவ்வொரு நபரிடமிருந்து தலா 400,000 ரூபா முதல் 1,000,000 ரூபா வரை பணம் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரீயூனியன் தீவிற்குள் மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் அனுமதிக்காததால், இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதை தவிர்க்குமாறு சிரமப்பட்ட உழைத்த பணத்தை வீணடிக்காதிருக்குமாறு பொதுமக்களை கடற்படை  லியுறுத்தியது.

ரீயூனியன் தீவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 38 இலங்கையர்கள் பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவுக்குள் சட்டவிரோதமான பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 38  இலங்கையர்கள் நேற்று இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 14 ஆம் திகதி இந்த இலங்கையர்கள் குழு, ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2022 டிசம்பர் முதலாம் திகதி 5 பணியாளர்களுடன் பலநாள் மீன்பிடி படகு ஒன்று புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் அவர்கள் டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம், பத்தலங்குண்டுவில் இருந்து 64 இலங்கையர்களை சட்டவிரோதமான ஏற்றிச் சென்றுள்ளனர்.அதனைத் தொடர்ந்து, பலநாள் மீன்பிடி படகு டியாகோ கார்சியா தீவை நோக்கிச் சென்றது. அங்கு அவர்கள் டிசம்பர் 30 ஆம் திகதி பிரித்தானியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.அதன்பிறகு, ஆட்கடத்தல் கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக இடம்பெயர்ந்த குழுவுடன் பிரான்ஸின் அதிகாரத்தின் கீழுள்ள ரீயூனியன் தீவுக்குச் சென்றுள்ளனர்.அங்கு அவர்கள் ஜனவரி 14 ஆம் திகதி ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.ரீயூனியன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் நேற்று புதன்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இதேவேளை, குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்த கடத்தலுக்கு தலைமை தாங்கிய கற்பிட்டி மற்றும் கண்டி பகுதிகளில் உள்ள ஆட் கடத்தல்காரர்கள், ஒவ்வொரு நபரிடமிருந்து தலா 400,000 ரூபா முதல் 1,000,000 ரூபா வரை பணம் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ரீயூனியன் தீவிற்குள் மக்கள் சட்டவிரோதமாக நுழைவதை பிரெஞ்சு அரசாங்கம் அனுமதிக்காததால், இதுபோன்ற மோசடிகளில் சிக்குவதை தவிர்க்குமாறு சிரமப்பட்ட உழைத்த பணத்தை வீணடிக்காதிருக்குமாறு பொதுமக்களை கடற்படை  லியுறுத்தியது.

Advertisement

Advertisement

Advertisement