• May 18 2024

4 கிராமி விருதுகள்! - இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை படைத்த பிரபல பாடகி!

Chithra / Feb 7th 2023, 7:37 am
image

Advertisement

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது.

இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது.

விழாவில் அடீல், டெய்லர் ஸ்விப்ட், ஜே-இசட், ஷானியா டுவைன் மற்றும் ஸ்டீவி வொண்டர் போன்ற உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


இந்த விழாவில் சிறந்த நடனம் மற்றும் எலக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் 'பிரேக் மை சோல்' என்கிற பாடலுக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியையுமான பியோன்ஸ் விருதை வென்றார்.

இதுதவிர சிறந்த 'ஆர் அன்ட் பி' ஆல்பம் உள்பட மேலும் 3 பிரிவுகளில் பியோன்ஸ் விருதுகளை வாங்கி குவித்தார். இதன் மூலம் 32 கிராமி விருதுகளை வென்று பியோன்ஸ் வரலாற்று சாதனை படைத்தார்.

அதே சமயம் சிறந்த பாடல் ஆல்பம் விருதை பியோன்ஸ் தொடர்ந்து 4-வது முறையாக தவறவிட்டார். இந்த ஆண்டு அந்த விருது இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகரும், பாடலாசிரியருமான ஹாரி ஸ்டைல்ஸ் தட்டி சென்றார். அவரது 'ஹாரிஸ் ஹவுஸ்' பாடலுக்கு சிறந்த பாடல் ஆல்பம் விருது கிடைத்தது.


`சிறந்த ஆடியோ புக், நரேஷன் அண்ட் ஸ்டோரிடெல்லிங் ரெகார்டிங்' பிரிவில், பிரபல ஹாலிவுட் நடிகை வயோலா டேவிஸ் தனது வாழ்வின் நினைவுகளை மையப்படுத்தி உருவாக்கிய `பைண்டிங் மீ' என்ற ஆடியோ பதிவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.

இந்திய ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைந்த ஆடையில் ராப் பாடகி கார்டி பி.

அமெரிக்காவின் நான்கு முக்கிய பொழுதுபோக்கு விருதுகளாக 'இஜிஓடி' கருதப்படுகிறது. எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளின் சுருக்கமே 'இஜிஓடி'. ஏற்கனவே எம்மி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளைப் பெற்றிருந்த டேவிஸ், தற்போது கிராமி விருதையும் வென்றிருக்கிறார்.


இதன் மூலம் `எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருது'களின் வெற்றியாளர் பட்டியலில், 57 வயதான டேவிஸ் 18-வது நபராக இடம் பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில் இடம்பெறும் 3-வது கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் சிறந்த இசை வீடியோ பிரிவில் 'ஆல் டூ வெல்: தி ஷார்ட் பிலிம்' என்ற குறும்படத்தை எழுதி இயக்கிதற்காக உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி டெய்லர் ஷிப்ட் விருதை வென்றார்.

4 கிராமி விருதுகள் - இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை படைத்த பிரபல பாடகி உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது.இந்த நிலையில் 2023-ம் ஆண்டுக்கான 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடந்தது.விழாவில் அடீல், டெய்லர் ஸ்விப்ட், ஜே-இசட், ஷானியா டுவைன் மற்றும் ஸ்டீவி வொண்டர் போன்ற உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் சிறந்த நடனம் மற்றும் எலக்ட்ரானிக் ரெக்கார்டிங் பிரிவில் 'பிரேக் மை சோல்' என்கிற பாடலுக்காக அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியையுமான பியோன்ஸ் விருதை வென்றார்.இதுதவிர சிறந்த 'ஆர் அன்ட் பி' ஆல்பம் உள்பட மேலும் 3 பிரிவுகளில் பியோன்ஸ் விருதுகளை வாங்கி குவித்தார். இதன் மூலம் 32 கிராமி விருதுகளை வென்று பியோன்ஸ் வரலாற்று சாதனை படைத்தார்.அதே சமயம் சிறந்த பாடல் ஆல்பம் விருதை பியோன்ஸ் தொடர்ந்து 4-வது முறையாக தவறவிட்டார். இந்த ஆண்டு அந்த விருது இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகரும், பாடலாசிரியருமான ஹாரி ஸ்டைல்ஸ் தட்டி சென்றார். அவரது 'ஹாரிஸ் ஹவுஸ்' பாடலுக்கு சிறந்த பாடல் ஆல்பம் விருது கிடைத்தது.`சிறந்த ஆடியோ புக், நரேஷன் அண்ட் ஸ்டோரிடெல்லிங் ரெகார்டிங்' பிரிவில், பிரபல ஹாலிவுட் நடிகை வயோலா டேவிஸ் தனது வாழ்வின் நினைவுகளை மையப்படுத்தி உருவாக்கிய `பைண்டிங் மீ' என்ற ஆடியோ பதிவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.இந்திய ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைந்த ஆடையில் ராப் பாடகி கார்டி பி.அமெரிக்காவின் நான்கு முக்கிய பொழுதுபோக்கு விருதுகளாக 'இஜிஓடி' கருதப்படுகிறது. எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளின் சுருக்கமே 'இஜிஓடி'. ஏற்கனவே எம்மி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதுகளைப் பெற்றிருந்த டேவிஸ், தற்போது கிராமி விருதையும் வென்றிருக்கிறார்.இதன் மூலம் `எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருது'களின் வெற்றியாளர் பட்டியலில், 57 வயதான டேவிஸ் 18-வது நபராக இடம் பிடித்துள்ளார். இவர் இந்த பட்டியலில் இடம்பெறும் 3-வது கறுப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் சிறந்த இசை வீடியோ பிரிவில் 'ஆல் டூ வெல்: தி ஷார்ட் பிலிம்' என்ற குறும்படத்தை எழுதி இயக்கிதற்காக உலகப்புகழ் பெற்ற பிரபல பாடகி டெய்லர் ஷிப்ட் விருதை வென்றார்.

Advertisement

Advertisement

Advertisement