யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார்
அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்போது அங்கிருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.
எனினும் அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் ய கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த யூடியூபர் அந்த பெண்ணையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார்.
இதன்போது '18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ 'உங்கட மகளை கூப்பிடுங்கோ' என்று சொன்னபடி குறித்த பெண்ணின் அறையின் வாசல் வரை சென்றதுடன் குறித்த பெண்ணை கேலி செய்தும் பேசியுள்ளார்.
இந்நிலையில் குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
உதவிசெய்வதாகக் கூறி பெண்ணிடம் அத்துமீறிய நபரின் காணொளி வைரல் யாழ்ப்பாண யூடியூபரை தேடும் மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல யூடியூபர் ஒருவர், ஏழ்மையான குடும்பம் ஒன்றிற்கு உதவுவதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு இளம் பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர், விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி குறித்த யூடியூபர் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார். அதிகமாக புலம்பயந்தோரிடம் பணத்தைப்பெற்று இந்த செயற்பாட்டை செய்து வருவதாக காணொளிகளில் குறிப்பிட்டுள்ளார் அந்தவகையில்,குடும்பம் ஒன்றிற்கு உதவி செய்வதாக தெரிவித்து குறித்த யூடியூபர் பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது அங்கிருந்த இளம் பெண் தன்னை காணொளி எடுக்க வேண்டாம் எனக் கூறிய போதிலும் வலுக்கட்டாயமாக அவரை காணொளி எடுக்க முயன்றுள்ளார்.எனினும் அந்தப் பெண் அதற்கு மறுத்ததால் ய கடுமையாக வார்த்தைப் பிரயோகங்களால் குறித்த யூடியூபர் அந்த பெண்ணையும் அவரின் தாயையும் திட்டியுள்ளார்.இதன்போது '18 வயசு ஆகிட்டு இன்னும் பால் குடி மறக்கேலையோ 'உங்கட மகளை கூப்பிடுங்கோ' என்று சொன்னபடி குறித்த பெண்ணின் அறையின் வாசல் வரை சென்றதுடன் குறித்த பெண்ணை கேலி செய்தும் பேசியுள்ளார். இந்நிலையில் குறித்த காணொளி நேற்று சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் குறித்த நபர் மற்றும் குறித்த குடும்பம் தொடர்பிலான விபரங்களை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.