தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள்

143

எதிர்வரும் வார இறுதியில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால் கடந்த காலங்களில் விதித்த கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த தினத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 51,581 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: