• May 10 2024

அரசியற் கைதிகளின் விடுதலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-அம்பிகா கோரிக்கை!

Sharmi / Jan 6th 2023, 2:06 pm
image

Advertisement

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்தை வெற்றியளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்த கருத்தினை மேற்கோள் காட்டி,வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அம்பிகா ஸ்ரீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரண்டாவது நாளாக இன்று நாவற்குழியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த போராட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.

தனியொரு கட்சி தமது கருத்துக்களை வலியுறுத்தும் போது  எமது பேரம் பேசும் சக்தி குறைவடையும் ன்பதனாலேயே சிறுபாண்மை மக்களாகிய நாங்கள் எமது அரசியல் கட்சிகளை வேறுபாடின்றி இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் ,பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்காகவும்  நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படாத நிலையில் மேலும் அழுத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம் .என்றார் .


அரசியற் கைதிகளின் விடுதலையில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்-அம்பிகா கோரிக்கை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்தை வெற்றியளிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்த கருத்தினை மேற்கோள் காட்டி,வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அம்பிகா ஸ்ரீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.இரண்டாவது நாளாக இன்று நாவற்குழியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று திரண்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதும் இந்த போராட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது.தனியொரு கட்சி தமது கருத்துக்களை வலியுறுத்தும் போது  எமது பேரம் பேசும் சக்தி குறைவடையும் என்பதனாலேயே சிறுபாண்மை மக்களாகிய நாங்கள் எமது அரசியல் கட்சிகளை வேறுபாடின்றி இந்த அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் ,பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்காகவும்  நேற்றைய தினம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படாத நிலையில் மேலும் அழுத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என  கேட்டுக்கொள்கிறோம் .என்றார் .

Advertisement

Advertisement

Advertisement