• May 04 2024

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் மீது கத்திக்குத்து...!samugammedia

Anaath / Nov 2nd 2023, 1:22 pm
image

Advertisement

இந்தியாவின் தெலங்கானா மாகாணத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அமெரிக்காவில் கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த வருண் ராஜ் (24) என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ் (24) என்ற இளைஞரை வால்பரைசோ நகரத்தில் உள்ள பொது உடற்பயிற்சி நிலையத்தில் ஆண்ட்ரேட் (24) என்ற இளைஞா் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த அவா், அருகில் உள்ள ஃபோா்ட் வைன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவா் உயிா் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ஆண்ட்ரேட் என்பவரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரிடம் ஆண்ட்ரேட் அளித்த வாக்குமூலம் குறித்து அவா்கள் வெளியிட்ட அறிக்கையில்,‘உடற்பயிற்சி நிலையத்தின் உள்ள ஓா் அறையில் மசாஜ் மேற்கொள்வதற்காக ஆண்ட்ரேட் சென்றுள்ளாா். அங்கே அவா் தேடி வந்த நபருக்குப் பதில் வேறு ஒருவா் (வருண் ராஜ்) இருந்ததைக் கண்டு அவரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதற்காக வருணைக் கத்தியால் குத்தியதாக ஆண்ட்ரேட் தெரிவித்தாா்.

இதையடுத்து, உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்ற போலீஸாா் மசாஜ் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அதிக அளவிலான ரத்தம் மற்றும் கத்தி இருந்ததை உறுதி செய்தனா். அந்த கத்தி ஆண்ட்ரேட் உடையது என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆண்ட்ரேட் மீது கொலை முயற்சி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என தெரிவித்தனா்.

இந்நிலையில் வருண் ராஜுக்கு முறையான சிகிச்சை வழங்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க உதவ வேண்டும் எனவும் அவரின் தந்தை ராமமூா்த்தி தெலங்கானா மாநில அரசிடம் கேட்டுக் கொண்டாா்.

இச்சம்பவம் குறித்து தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் கே.டி. ராமா ராவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில்,‘வருண் ராஜுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய தூதரகம் மற்றும் வெளிநாடு வாழ் தெலங்கானாவைச் சோ்ந்த மக்களால் வழங்கப்படும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் ஒருவர் மீது கத்திக்குத்து.samugammedia இந்தியாவின் தெலங்கானா மாகாணத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு அமெரிக்காவில் கத்திக்குத்து நிகழ்ந்துள்ளது.அமெரிக்காவின் வால்பரைசோ நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தெலங்கானாவைச் சோ்ந்த வருண் ராஜ் (24) என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,அமெரிக்காவில் கணினி அறிவியல் படிப்பை மேற்கொண்டு வரும் வருண் ராஜ் (24) என்ற இளைஞரை வால்பரைசோ நகரத்தில் உள்ள பொது உடற்பயிற்சி நிலையத்தில் ஆண்ட்ரேட் (24) என்ற இளைஞா் கத்தியால் குத்தினாா். அதில் பலத்த காயமடைந்த அவா், அருகில் உள்ள ஃபோா்ட் வைன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவா் உயிா் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ஆண்ட்ரேட் என்பவரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரிடம் ஆண்ட்ரேட் அளித்த வாக்குமூலம் குறித்து அவா்கள் வெளியிட்ட அறிக்கையில்,‘உடற்பயிற்சி நிலையத்தின் உள்ள ஓா் அறையில் மசாஜ் மேற்கொள்வதற்காக ஆண்ட்ரேட் சென்றுள்ளாா். அங்கே அவா் தேடி வந்த நபருக்குப் பதில் வேறு ஒருவா் (வருண் ராஜ்) இருந்ததைக் கண்டு அவரால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடாது என்பதற்காக வருணைக் கத்தியால் குத்தியதாக ஆண்ட்ரேட் தெரிவித்தாா்.இதையடுத்து, உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்ற போலீஸாா் மசாஜ் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அதிக அளவிலான ரத்தம் மற்றும் கத்தி இருந்ததை உறுதி செய்தனா். அந்த கத்தி ஆண்ட்ரேட் உடையது என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆண்ட்ரேட் மீது கொலை முயற்சி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என தெரிவித்தனா்.இந்நிலையில் வருண் ராஜுக்கு முறையான சிகிச்சை வழங்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க உதவ வேண்டும் எனவும் அவரின் தந்தை ராமமூா்த்தி தெலங்கானா மாநில அரசிடம் கேட்டுக் கொண்டாா்.இச்சம்பவம் குறித்து தெலங்கானா தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் கே.டி. ராமா ராவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில்,‘வருண் ராஜுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய தூதரகம் மற்றும் வெளிநாடு வாழ் தெலங்கானாவைச் சோ்ந்த மக்களால் வழங்கப்படும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement