• May 18 2024

யாழ்.பல்கலை புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Apr 18th 2023, 4:01 pm
image

Advertisement

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகளை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி, புதன்கிழமை முற்பகல் 9 மணி முதல் ஆரம்பமாகவுள்ளன.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, முகாமைத்துவம் மற்றும் வணிகம் ஆகிய கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன.

திருநெல்வேலி கிழக்கு – கலாசாலை வீதியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்கள் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், 2021/2022 கல்வியாண்டுக்காகப் பதிவு செய்த சகல மாணவர்களையும் இந் நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறும் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.

யாழ்.பல்கலை புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு samugammedia யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகளை மேற்கொண்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி, புதன்கிழமை முற்பகல் 9 மணி முதல் ஆரம்பமாகவுள்ளன.2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, முகாமைத்துவம் மற்றும் வணிகம் ஆகிய கற்கை நெறிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வுகள் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளன.திருநெல்வேலி கிழக்கு – கலாசாலை வீதியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள், வணிக பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்கள் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறாத மாணவர்கள் மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தில் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், 2021/2022 கல்வியாண்டுக்காகப் பதிவு செய்த சகல மாணவர்களையும் இந் நிகழ்வில் தவறாது கலந்து கொள்ளுமாறும் பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement