• May 04 2024

இலங்கையில் தீவிரமாக பரவும் மற்றுமொரு நோய் தொற்று! சுகாதார அமைச்சு எச்சரிக்கை SamugamMedia

Chithra / Mar 27th 2023, 7:55 am
image

Advertisement

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் 1400 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர்  துஷானி தாபரே தெரிவித்துள்ளார். 


வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும்.


கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை நீடிப்பதுடன் கண்கள் சிவப்பது இந்நோயின் ஒரு முக்கியமான அறிகுறியாகும். 

எனவே மக்கள் இந்நோய் தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டியது கட்டாயமாகும்.

இலங்கையில் தீவிரமாக பரவும் மற்றுமொரு நோய் தொற்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை SamugamMedia எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.ஒரு வருடத்தில் 1400 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர்  துஷானி தாபரே தெரிவித்துள்ளார். வயல், சதுப்பு நிலங்கள், வண்டல் நிலங்கள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும்.கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை நீடிப்பதுடன் கண்கள் சிவப்பது இந்நோயின் ஒரு முக்கியமான அறிகுறியாகும். எனவே மக்கள் இந்நோய் தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டியது கட்டாயமாகும்.

Advertisement

Advertisement

Advertisement