• May 18 2024

புத்தாண்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு samugammedia

Chithra / Nov 12th 2023, 12:22 pm
image

Advertisement


அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டே வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அடுத்து வரும் ஆண்டின் முற்பகுதியில் சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், அடுத்து வரவு, செலவுத்திட்டத்திற்கான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதன் காரணமாக குறித்த சட்ட மூலத்தினை சமர்ப்பிக்கும் செயற்பாடு தாமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் பயங்கரவாததடைச் சட்டம் சம்பந்தமாக ஏற்கனவே பல தரப்பட்ட தரப்பினரும் கரிசனைகளை வெளியிட்டுள்ளமையின் காரணமாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

புத்தாண்டில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு samugammedia அடுத்துவரும் புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜாபக்ஷ தெரிவித்தார்.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துவெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.தற்போது அந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்களின் அபிப்பிராயங்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் உள்ளடக்கப்பட்டே வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்து வரும் ஆண்டின் முற்பகுதியில் சட்டமூலத்தினை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், அடுத்து வரவு, செலவுத்திட்டத்திற்கான விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதன் காரணமாக குறித்த சட்ட மூலத்தினை சமர்ப்பிக்கும் செயற்பாடு தாமதிக்கப்பட்டுள்ளது.எனினும், அரசாங்கம் பயங்கரவாததடைச் சட்டம் சம்பந்தமாக ஏற்கனவே பல தரப்பட்ட தரப்பினரும் கரிசனைகளை வெளியிட்டுள்ளமையின் காரணமாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தினை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement