• Nov 13 2025

இந்தியா, பாகிஸ்தான் குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு அச்சுறுத்தலா? பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Nov 12th 2025, 8:39 am
image


இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 

நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் 

தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுகின்றன. 

நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார். 

 

இந்தியா, பாகிஸ்தான் குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு அச்சுறுத்தலா பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுவதால், நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வுப் பிரிவுகள் தீவிரமாக செயற்படுகின்றன. நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்துகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement