• May 18 2024

காட்டுக்குள் குட்டி டைனோசர்களா..? இணையத்தை அதிர வைத்த வீடியோ! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 1:54 pm
image

Advertisement

பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. 

விண்வெளியில் இருந்து பூமியின் மீது மோதிய ஒரு ராட்சத விண்கல் காரணமாக, பூமியின் தட்பவெப்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தால், மொத்த டைனோசர் இனமும் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது நிரூபனமாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் டைனோசர் இனத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், குட்டி டைனோசர்கள் போல் தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பியூடெங்கேபிடென் என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், குட்டி டைனோசர்கள் போல் காட்சியளிக்கும் சில விலங்குகள், காட்டுக்குள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.


டைனோசர் வகையை சேர்ந்த அரியவகை உயிரினமா? என்பது குறித்து சமூக ஊடகங்களில், நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர் . இதனிடையே, அமெரிக்காவில் வாழும் ரக்கூன்கள் விலங்கு இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காட்டுக்குள் குட்டி டைனோசர்களா. இணையத்தை அதிர வைத்த வீடியோ SamugamMedia பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பல்வேறு வகையான டைனோசர்கள் வாழ்ந்திருக்கின்றன. விண்வெளியில் இருந்து பூமியின் மீது மோதிய ஒரு ராட்சத விண்கல் காரணமாக, பூமியின் தட்பவெப்ப நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தால், மொத்த டைனோசர் இனமும் அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.அவ்வாறு அழிந்து போன டைனோசர்களின் புதை படிமங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை கிடைத்த புதைபடிமங்களின் அடிப்படையில் டைனோசர்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் வகையைச் சேர்ந்தவை என்பது நிரூபனமாகி இருந்தாலும், பறவை இனத்திற்கும் டைனோசர் இனத்திற்கும் ஏதேனும் தொடர்புகள் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த நிலையில், குட்டி டைனோசர்கள் போல் தோற்றமளிக்கும் அரியவகை உயிரினம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பியூடெங்கேபிடென் என்ற டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், குட்டி டைனோசர்கள் போல் காட்சியளிக்கும் சில விலங்குகள், காட்டுக்குள் ஓடும் காட்சி பதிவாகியுள்ளது.டைனோசர் வகையை சேர்ந்த அரியவகை உயிரினமா என்பது குறித்து சமூக ஊடகங்களில், நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர் . இதனிடையே, அமெரிக்காவில் வாழும் ரக்கூன்கள் விலங்கு இனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.This took me a second. 😂 pic.twitter.com/JgqVSUcYIb— Buitengebieden (@buitengebieden) February 24, 2023

Advertisement

Advertisement

Advertisement