• May 18 2024

கோழிகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கனேடியர்! வெளியான பின்னணி SamugamMedia

Chithra / Mar 9th 2023, 12:36 pm
image

Advertisement

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மோன்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நகர நிர்வாகத்தின் உத்தரவினை மீறி கோழி வளர்ப்பில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவான் டெக்கோ என்ற முன்னாள் மின் பொறியியலாளர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றி ஆறு கோழிகளை வீட்டின் பின்பகுதியில் இவர் வளர்த்துள்ளார்.

கோழிகளை நகர நிர்வாகத்திடம் வழங்க மறுத்தமை காரணமாக குறித்த நபருக்கு 500 டொலர் அபராதம் விதித்திருந்தது.

இந்த அபராதத்தை செலுத்தாது சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு தீர்மானித்த காரணத்தினால் இவான் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலைக் குற்றவாளிகள், போதைப் பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் அடைக்கப்பட்ட சிறையில் தாம் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோழி வளர்த்த காரணத்தினால் தாம் சிறையில் அடைக்கப்பட்டதாக அறிந்துகொண்ட சக கைதிகள் விழுந்து விழுந்து சிறித்தனர் என அவர் தனது சிறைச்சாலை அனுபவத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.    

கோழிகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கனேடியர் வெளியான பின்னணி SamugamMedia கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் எட்மோன்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் கோழி வளர்ப்பில் ஈடுபட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.நகர நிர்வாகத்தின் உத்தரவினை மீறி கோழி வளர்ப்பில் ஈடுபட்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இவான் டெக்கோ என்ற முன்னாள் மின் பொறியியலாளர் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.அனுமதிப்பத்திரம் இன்றி ஆறு கோழிகளை வீட்டின் பின்பகுதியில் இவர் வளர்த்துள்ளார்.கோழிகளை நகர நிர்வாகத்திடம் வழங்க மறுத்தமை காரணமாக குறித்த நபருக்கு 500 டொலர் அபராதம் விதித்திருந்தது.இந்த அபராதத்தை செலுத்தாது சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கு தீர்மானித்த காரணத்தினால் இவான் சிறையில் அடைக்கப்பட்டார்.கொலைக் குற்றவாளிகள், போதைப் பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் அடைக்கப்பட்ட சிறையில் தாம் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.கோழி வளர்த்த காரணத்தினால் தாம் சிறையில் அடைக்கப்பட்டதாக அறிந்துகொண்ட சக கைதிகள் விழுந்து விழுந்து சிறித்தனர் என அவர் தனது சிறைச்சாலை அனுபவத்தை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.    

Advertisement

Advertisement

Advertisement