• May 05 2024

அமைச்சர் டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

Chithra / Jan 19th 2023, 1:59 pm
image

Advertisement

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தச் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் கோரியுள்ளனர்.

இந்த எழுத்தாணை கோரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

அமைச்சர் டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தச் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் கோரியுள்ளனர்.இந்த எழுத்தாணை கோரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement