• May 04 2024

இலங்கை கடற்படை வீரர்களை கௌரவித்த சீன அரசு..! சர்வதேச சமூகத்தில் குவியும் பாராட்டு samugammedia

Chithra / Jun 8th 2023, 6:31 am
image

Advertisement

மோசமான வானிலை காரணமாக ஆழ்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பலான "Lu Pen Yuan U 028" மீட்பு பணியில் ஈடுபட்ட ஒன்பது இலங்கை கடற்படை வீரர்களையும் சீன அரசு கௌரவித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹோங், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

விஜயபாகு கப்பலின் நீர்மூழ்கிக் குழுவினர் கடந்த (16) திகதி ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய சீன மீன்பிடி கப்பலுக்குள் இருந்த பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


கடற்பகுதியின் கடுமையான தன்மைக்கு மத்தியில், மூன்று நாட்களாக மிகவும் கடினமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் பன்னிரண்டு சடலங்களை அடையாளம் கண்டு மீட்டிருந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கை நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள், கப்பல் முற்றாக கடலில் மூழ்கியிருந்தது.

இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் இலங்கை கடற்படையினர் உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் மேற்கொண்ட விசேட நடவடிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் விசேட பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. 

இலங்கை கடற்படை வீரர்களை கௌரவித்த சீன அரசு. சர்வதேச சமூகத்தில் குவியும் பாராட்டு samugammedia மோசமான வானிலை காரணமாக ஆழ்கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பலான "Lu Pen Yuan U 028" மீட்பு பணியில் ஈடுபட்ட ஒன்பது இலங்கை கடற்படை வீரர்களையும் சீன அரசு கௌரவித்துள்ளது.இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென்ஹோங், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.விஜயபாகு கப்பலின் நீர்மூழ்கிக் குழுவினர் கடந்த (16) திகதி ஆழ்கடலில் அனர்த்தத்தில் சிக்கிய சீன மீன்பிடி கப்பலுக்குள் இருந்த பணியாளர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.கடற்பகுதியின் கடுமையான தன்மைக்கு மத்தியில், மூன்று நாட்களாக மிகவும் கடினமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் பன்னிரண்டு சடலங்களை அடையாளம் கண்டு மீட்டிருந்தனர்.இந்த மீட்பு நடவடிக்கை நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள், கப்பல் முற்றாக கடலில் மூழ்கியிருந்தது.இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் இலங்கை கடற்படையினர் உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் மேற்கொண்ட விசேட நடவடிக்கைக்கு சர்வதேச சமூகத்தில் விசேட பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement