• May 10 2024

சூழ்நிலையை மையப்படுத்தி உக்ரேனிய மக்கள் உருவாக்கிய கிறிஸ்மஸ் மரம்!

Chithra / Dec 25th 2022, 1:51 pm
image

Advertisement

உலகளாவிய மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினத்தை நத்தார் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், போர் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் உக்ரேனிய மக்கள் கிறிஸ்மஸ் மரம் ஒன்றை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

போர் சூழலை மையப்படுத்தி உக்ரைனின் மைகோலைவ் நகரிலே குறித்த மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யுத்த சூழ்நிலைகளில் இராணுவ வீரர்களும் தங்களது யுத்த தளபாடங்களும் எதிரிகளின் கண்ணில் படாதவாறு மூடுவதற்கு பயன்படுத்தப்படும் உருமறைப்பு வலைகளை பயன்படுத்தியே இந்த கிறிஸ்மஸ் மரத்தை உக்ரேனிய மக்கள் உருவாக்கியுள்ளனர்.

பண்டிகைக்காலம் நிறைவு பெற்றதும் குறித்த கிறிஸ்மஸ் மரத்தை செய்ய பயன்படுத்திய உருமறைப்பு வலை போன்ற மூலப்பொருட்களை ரஷ்ய படையினருடன் போரிடும் தமது உக்ரைன் வீரர்களுக்கு அனுப்ப உள்ளதாக உக்ரேனிய மக்கள் தெரிவித்துள்ளனர்.


சூழ்நிலையை மையப்படுத்தி உக்ரேனிய மக்கள் உருவாக்கிய கிறிஸ்மஸ் மரம் உலகளாவிய மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு தினத்தை நத்தார் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், போர் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் உக்ரேனிய மக்கள் கிறிஸ்மஸ் மரம் ஒன்றை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.போர் சூழலை மையப்படுத்தி உக்ரைனின் மைகோலைவ் நகரிலே குறித்த மரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.யுத்த சூழ்நிலைகளில் இராணுவ வீரர்களும் தங்களது யுத்த தளபாடங்களும் எதிரிகளின் கண்ணில் படாதவாறு மூடுவதற்கு பயன்படுத்தப்படும் உருமறைப்பு வலைகளை பயன்படுத்தியே இந்த கிறிஸ்மஸ் மரத்தை உக்ரேனிய மக்கள் உருவாக்கியுள்ளனர்.பண்டிகைக்காலம் நிறைவு பெற்றதும் குறித்த கிறிஸ்மஸ் மரத்தை செய்ய பயன்படுத்திய உருமறைப்பு வலை போன்ற மூலப்பொருட்களை ரஷ்ய படையினருடன் போரிடும் தமது உக்ரைன் வீரர்களுக்கு அனுப்ப உள்ளதாக உக்ரேனிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement