• May 05 2024

'இலங்கைக்கு வாருங்கள்'..! அறுகம்பேயில் மரதன் ஓட்டப்போட்டி..! வெளிநாட்டவர்களும் பங்கேற்பு..!samugammedia

Sharmi / Jul 25th 2023, 1:17 pm
image

Advertisement

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு "இலங்கைக்கு வாருங்கள்” எனும் தொனிப்பொருளில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என சுமார் 200பேர் கலந்துகொண்ட குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1 கிலோமீட்டர் பிரதான அரை மரதன், 10கிலோ மீட்டர் மற்றும் 5கிலோமீட்டர் மரதன் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.

5கிலோமீட்டர் போட்டியில் சிறுவர்களும், முதியோர்களும் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 21.1 கிலோமீட்டர் பிரதான அரை மரதன் போட்டியின் ஆண்கள் பிரிவில் மஹியங்கனையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால முதலாமிடத்தினையும், அவிசாவளையைச் சேர்ந்த கெளும் தர்மபால இரண்டாமிடத்தினையும், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் பார் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் ஒஸ்ரியாவைச் சேர்ந்ததெரேஸ் ஈடர் முதலாமிடத்தினையும், சுவிஸ்லாந்தை சேர்ந்த பிரான்ஸ் மேரியா இரண்டாமிடத்தினையும், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த லோரா மெகென்ஸி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

10 கிலோமீட்டர் போட்டியில் ஜேர்மனியைச் சேர்ந்த மார்க்னெஸ் முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த சப்னாஜ் உபைதுல்லா இரண்டாமிடத்தினையும், சுவிஸ்லாந்தைச் சேர்ந்த ஜிராட் பெய்ரா மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். 5கிலோமீட்டர் ஓட்டப்போட்டியில் கல்முனையை சேர்ந்த றிஹான் முதலாமிடத்தினையும், பொத்துவிலை சேர்ந்த மொஹானி இரண்டாமிடத்தினையும் பொத்துவிலை சேர்ந்த றினோஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







'இலங்கைக்கு வாருங்கள்'. அறுகம்பேயில் மரதன் ஓட்டப்போட்டி. வெளிநாட்டவர்களும் பங்கேற்பு.samugammedia சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு "இலங்கைக்கு வாருங்கள்” எனும் தொனிப்பொருளில் அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி பொத்துவில் அறுகம்பே பிரதேசத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என சுமார் 200பேர் கலந்துகொண்ட குறித்த மரதன் ஓட்டப்போட்டியானது 21.1 கிலோமீட்டர் பிரதான அரை மரதன், 10கிலோ மீட்டர் மற்றும் 5கிலோமீட்டர் மரதன் என மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது. 5கிலோமீட்டர் போட்டியில் சிறுவர்களும், முதியோர்களும் கலந்துகொண்டனர். ஏனைய இரு பிரிவுகளிலும் பிரபல மரதன் ஓட்ட வீரர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இதன்போது 21.1 கிலோமீட்டர் பிரதான அரை மரதன் போட்டியின் ஆண்கள் பிரிவில் மஹியங்கனையைச் சேர்ந்த ரீ.டபள்யூ.ரத்னபால முதலாமிடத்தினையும், அவிசாவளையைச் சேர்ந்த கெளும் தர்மபால இரண்டாமிடத்தினையும், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் பார் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். பெண்கள் பிரிவில் ஒஸ்ரியாவைச் சேர்ந்ததெரேஸ் ஈடர் முதலாமிடத்தினையும், சுவிஸ்லாந்தை சேர்ந்த பிரான்ஸ் மேரியா இரண்டாமிடத்தினையும், ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த லோரா மெகென்ஸி மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.10 கிலோமீட்டர் போட்டியில் ஜேர்மனியைச் சேர்ந்த மார்க்னெஸ் முதலாமிடத்தினையும், இலங்கையைச் சேர்ந்த சப்னாஜ் உபைதுல்லா இரண்டாமிடத்தினையும், சுவிஸ்லாந்தைச் சேர்ந்த ஜிராட் பெய்ரா மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார். 5கிலோமீட்டர் ஓட்டப்போட்டியில் கல்முனையை சேர்ந்த றிஹான் முதலாமிடத்தினையும், பொத்துவிலை சேர்ந்த மொஹானி இரண்டாமிடத்தினையும் பொத்துவிலை சேர்ந்த றினோஸ் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டார்.அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் பிரதம அதிதியாகவும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.குறித்த மரதன் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றுதழ்களுடன் பணப்பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement