• May 18 2024

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மோசடியா? samugammedia

Chithra / Sep 23rd 2023, 3:19 pm
image

Advertisement

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் 11 வழக்குகளுக்குறிய சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என 2021 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

2021 ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 69 வழக்குகளை தாக்கல்செய்த நிலையில், அவற்றில் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாகவும், இது மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் 58 சதவீதமாகும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த ஆணைக்குழுவின் சட்டப்பிரிவில் 1508 தீர்வு காணப்படாத கோப்புகள் இருப்பதாகவும் அவற்றில் 489 கோப்புகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிவரை 926 கோப்புகள் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 பணிகளில் 11 பணிகள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் 36 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள், 203 மூன்றாம் நிலை வெற்றிடங்கள், 158 இரண்டாம் நிலை வெற்றிடங்கள், 56 ஆரம்ப நிலை வெற்றிடங்கள் மற்றும் 15 புலனாய்வு பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மோசடியா samugammedia  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 89 வழக்குகளில் 45 வழக்குகள் பல்வேறு காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகளில் 11 வழக்குகளுக்குறிய சந்தேகநபர்கள் குற்றமற்றவர்கள் என 2021 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 69 வழக்குகளை தாக்கல்செய்த நிலையில், அவற்றில் 40 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதாகவும், இது மொத்த வழக்குகளின் எண்ணிக்கையில் 58 சதவீதமாகும் என்றும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், குறித்த ஆணைக்குழுவின் சட்டப்பிரிவில் 1508 தீர்வு காணப்படாத கோப்புகள் இருப்பதாகவும் அவற்றில் 489 கோப்புகள் ஐந்தாண்டுகளுக்கு மேலாக தீர்வு காணப்படாமல் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிவரை 926 கோப்புகள் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள 27 பணிகளில் 11 பணிகள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, கடந்த வருடம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவில் 36 சிரேஷ்ட நிலை வெற்றிடங்கள், 203 மூன்றாம் நிலை வெற்றிடங்கள், 158 இரண்டாம் நிலை வெற்றிடங்கள், 56 ஆரம்ப நிலை வெற்றிடங்கள் மற்றும் 15 புலனாய்வு பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement