• May 18 2024

இலங்கையை அண்மிக்கும் சூறாவளி - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Dec 12th 2022, 10:52 am
image

Advertisement

மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை காலநிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.


கடந்த சில நாட்களில் அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாகவும், இது இலங்கையை நிச்சயமாகப் பாதிக்குமா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியாது.

காற்றின் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கையை அண்மிக்கும் சூறாவளி - வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை காலநிலையில் மீண்டும் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.கடந்த சில நாட்களில் அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாகவும், இது இலங்கையை நிச்சயமாகப் பாதிக்குமா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியாது.காற்றின் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement