• May 04 2024

சேவல் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்- தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்!

Sharmi / Jan 6th 2023, 1:00 pm
image

Advertisement

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தாம் நீண்ட காலமாக சேவல் சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் முதுநிலை உப தலைவர் கணபதி கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய பிரதான கட்சிகள் சேவல் சின்னத்துடன் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கணபதி கனகராஜ் மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், முக்கிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தனது கட்சிக்கு பாதகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

சேவல் சின்னத்தில் போட்டியிட தீர்மானம்- தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஒவ்வொரு உள்ளூராட்சி சபையிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று (05) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.தாம் நீண்ட காலமாக சேவல் சின்னத்துடன் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் தற்போதைய நிலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் முதுநிலை உப தலைவர் கணபதி கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் ஏனைய பிரதான கட்சிகள் சேவல் சின்னத்துடன் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெறும் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கணபதி கனகராஜ் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், முக்கிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதன் மூலம் தனது கட்சிக்கு பாதகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement