• May 04 2024

முற்றுமுழுதான பௌத்த மயமாக்கலை நோக்கி பயணிக்கும் தொல்பொருள் திணைக்களம்...!சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 1:16 pm
image

Advertisement

இலங்கை அரசாங்கத்தினுடைய தொல்பொருள் திணைக்களம் முற்றுமுழுதாக பௌத்த மயமாக்கலை உருவாக்குவதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்

நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுடைய பதவி விலகல் தொடர்பாக இன்று வடமாகாணத்தில் நீதி சட்டத்தரணி சங்கங்கள் தொடர்பாக சட்டத்தரணிகளின் அழைப்பின் பேரில் வடமாகாண நீதிமன்றங்களுக்கு அவர்கள் புறக்கணிக்கப்பட்;டு அனைத்து சட்டத்தரணிகளும் வீதியில் நின்று போராடி இருக்கின்றார்கள்.

இன்றுடன்(04) மூன்று நாட்களாக முல்லைத்தீவு நீதிமன்றம் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கின்றது சரவணராஜா நீதிபதி அவர்கள் தன்னுடைய உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து மனவிரக்தியுடன் வெளியேறி சென்றதன் காரணமாக இன்று இந்த செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

மேலும், கடந்த காலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது குறிப்பிடலாம் நீதிபதி அவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர் பிடியாணையை பிறப்பித்து கைது செய்யலாம் என்ற பல ஏற்பாடுகள் இருந்தாலும் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது பல வரலாற்று அரசியல்வாதிகள் பல்துறை சார்ந்தவர்களை அரசாங்கத்தின்  நிகழ்ச்சி நிரலில் கூட பல கொலைகள் இடம்பெற்றுள்ளது.

அதற்கான தீர்ப்பும் இல்லை விசாரணையும் இல்லை அதனை கண்டறியவில்லை  அவை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறுகின்ற கொலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் காரணமாக நீதிபதி அவர்கள் தன்னுடைய உயிரை பாதுகாப்பதற்காக நாட்டில் இருந்து சென்று இருக்கின்றார்.  நீதிபதிக்கே இவ்வாறான நிலமை இருக்கின்றபோது சாதாரண மக்களுடைய நிலைமையை நாங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

மேலும் குறுந்தூர் மலையில் இருக்கின்ற சிவலிங்க ஆலயத்தை அழித்து ஒழித்து விட்டு அந்த இடத்திலே விகாரையை அமைக்கின்றபோது தான் அவை நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சென்று இருந்தது.  குறுந்தூர் மலையானது 2500 வருடங்களுக்கு முன்பு நாகர்கள் இயக்கர்கள் தமிழராக இருந்த போது அவர்கள் அவ்விடத்தில் சிவனை வழிபட்ட ஒரு இடமாக உறுதிபடுத்தப்படுகின்றது என கூறியுள்ளார்

மேலும் தமிழ் ஆராட்சியாளர்களால் அவை உறுதிப்படுத்தப்படுகின்றது ஆனால் அவை இலங்கையின் அரசியல் யாப்பின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் இலங்கை அரசாங்கத்தினுடைய தொல்பொருள் திணைக்களம் முற்றுமுழுதாக பௌத்த மயமாக்கலை உருவாக்குவதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்

அந்த வகையிலே குறுந்தூர் மலை விவகாரமும் இருக்கின்றது. மேலும் குறுந்தூர் மலையிலே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற சிவலிங்கம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அதனை ஒத்த படத்தை வைத்து தொல்பொருள் திணைக்களம் அதனை ஒரு சிவலிங்கமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் குறுந்தூர்மலையில் கண்டெடுக்கப்பட்ட அதே சிவலிங்கத்தை அவர்கள் பௌத்த மதத்தினுடைய அடையாளமாக காட்டுகின்றார்கள்.  இதிலே உண்மைகள் அளிக்கப்பட்டு கட்டாயப்படுத்தி வரலாறுகள் மாற்றப்படுகின்றது என தெரிவித்துள்ளார்

மேலும் தொல்பொருள் திணைக்களம் ஆய்வினை மேற்கொள்ள செல்லுகின்றபோது வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்கு யாழ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தேன். ஆனால் அமைச்சர் கூறியிருந்தார் உங்களுடைய இந்து மதத்திற்கு எந்த வித பாதிப்பும் வராது என்றும் இதனை ஒரு ஆராய்ச்சியாகத்தான் மேற்கொள்ளுகின்றோம் என உறுதி மொழி வழங்கினார் என்றும் ஆனால் சிவலிங்க ஆலயம் இடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பௌத்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

மேலும் இது குறித்து அமைச்சரிடத்திலும் பதில் இல்லை அரசாங்கத்திடமும் பதில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையிலும் கலவரத்தின் அடிப்படையிலும் நீதிபதி அவர்கள் பதவி விலகி சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்

மேலும் அரசாங்கம் வெறுமனே இது ஒரு சட்டத்துறை சார்ந்தது ஆணைக்குழு இதனை விசாரிக்க வேண்டும் என கூறி விலகி இருப்பது எதிர்காலத்தில் பொருத்தமற்ற விடயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, வடமாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளினுடைய தேவைகளுக்கு புலம்பெயர்ந்தோரிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு என்டர்ஸ் கோப் மிசினை புலம்பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் என்டர்ஸ் கோப் மிசினை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு அங்குள்ள பணிப்பாளர் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இதனை முற்றிலும் தாம் எதிர்ப்பதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்களினால் செய்ய முடியாதவற்றை எமது பிரதேசத்தில் தற்போது ஒரு சில புலம் பெயர்ந்தோரால் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள என்டர்ஸ் கோப் மிசினை அநுராதபுரத்திற்கு மாற்ற முடியாது என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முற்றுமுழுதான பௌத்த மயமாக்கலை நோக்கி பயணிக்கும் தொல்பொருள் திணைக்களம்.சபையில் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றச்சாட்டு.samugammedia இலங்கை அரசாங்கத்தினுடைய தொல்பொருள் திணைக்களம் முற்றுமுழுதாக பௌத்த மயமாக்கலை உருவாக்குவதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுடைய பதவி விலகல் தொடர்பாக இன்று வடமாகாணத்தில் நீதி சட்டத்தரணி சங்கங்கள் தொடர்பாக சட்டத்தரணிகளின் அழைப்பின் பேரில் வடமாகாண நீதிமன்றங்களுக்கு அவர்கள் புறக்கணிக்கப்பட்;டு அனைத்து சட்டத்தரணிகளும் வீதியில் நின்று போராடி இருக்கின்றார்கள். இன்றுடன்(04) மூன்று நாட்களாக முல்லைத்தீவு நீதிமன்றம் இயங்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கின்றது சரவணராஜா நீதிபதி அவர்கள் தன்னுடைய உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து மனவிரக்தியுடன் வெளியேறி சென்றதன் காரணமாக இன்று இந்த செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.மேலும், கடந்த காலங்களை ஒப்பிட்டுப்பார்க்கும் போது குறிப்பிடலாம் நீதிபதி அவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் அவர் பிடியாணையை பிறப்பித்து கைது செய்யலாம் என்ற பல ஏற்பாடுகள் இருந்தாலும் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது பல வரலாற்று அரசியல்வாதிகள் பல்துறை சார்ந்தவர்களை அரசாங்கத்தின்  நிகழ்ச்சி நிரலில் கூட பல கொலைகள் இடம்பெற்றுள்ளது. அதற்கான தீர்ப்பும் இல்லை விசாரணையும் இல்லை அதனை கண்டறியவில்லை  அவை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறுகின்ற கொலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.மேலும் இதன் காரணமாக நீதிபதி அவர்கள் தன்னுடைய உயிரை பாதுகாப்பதற்காக நாட்டில் இருந்து சென்று இருக்கின்றார்.  நீதிபதிக்கே இவ்வாறான நிலமை இருக்கின்றபோது சாதாரண மக்களுடைய நிலைமையை நாங்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மேலும் குறுந்தூர் மலையில் இருக்கின்ற சிவலிங்க ஆலயத்தை அழித்து ஒழித்து விட்டு அந்த இடத்திலே விகாரையை அமைக்கின்றபோது தான் அவை நீதிமன்ற செயற்பாடுகளுக்கு சென்று இருந்தது.  குறுந்தூர் மலையானது 2500 வருடங்களுக்கு முன்பு நாகர்கள் இயக்கர்கள் தமிழராக இருந்த போது அவர்கள் அவ்விடத்தில் சிவனை வழிபட்ட ஒரு இடமாக உறுதிபடுத்தப்படுகின்றது என கூறியுள்ளார் மேலும் தமிழ் ஆராட்சியாளர்களால் அவை உறுதிப்படுத்தப்படுகின்றது ஆனால் அவை இலங்கையின் அரசியல் யாப்பின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் இலங்கை அரசாங்கத்தினுடைய தொல்பொருள் திணைக்களம் முற்றுமுழுதாக பௌத்த மயமாக்கலை உருவாக்குவதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார் அந்த வகையிலே குறுந்தூர் மலை விவகாரமும் இருக்கின்றது. மேலும் குறுந்தூர் மலையிலே கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற சிவலிங்கம் வவுனியா மாவட்ட செயலகத்தில் அதனை ஒத்த படத்தை வைத்து தொல்பொருள் திணைக்களம் அதனை ஒரு சிவலிங்கமாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் குறுந்தூர்மலையில் கண்டெடுக்கப்பட்ட அதே சிவலிங்கத்தை அவர்கள் பௌத்த மதத்தினுடைய அடையாளமாக காட்டுகின்றார்கள்.  இதிலே உண்மைகள் அளிக்கப்பட்டு கட்டாயப்படுத்தி வரலாறுகள் மாற்றப்படுகின்றது என தெரிவித்துள்ளார் மேலும் தொல்பொருள் திணைக்களம் ஆய்வினை மேற்கொள்ள செல்லுகின்றபோது வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதற்கு யாழ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களையும் சேர்த்துக்கொள்ளுமாறு கூறியிருந்தேன். ஆனால் அமைச்சர் கூறியிருந்தார் உங்களுடைய இந்து மதத்திற்கு எந்த வித பாதிப்பும் வராது என்றும் இதனை ஒரு ஆராய்ச்சியாகத்தான் மேற்கொள்ளுகின்றோம் என உறுதி மொழி வழங்கினார் என்றும் ஆனால் சிவலிங்க ஆலயம் இடிக்கப்பட்டுள்ளது. புதிதாக பௌத்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் மேலும் இது குறித்து அமைச்சரிடத்திலும் பதில் இல்லை அரசாங்கத்திடமும் பதில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையிலும் கலவரத்தின் அடிப்படையிலும் நீதிபதி அவர்கள் பதவி விலகி சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார் மேலும் அரசாங்கம் வெறுமனே இது ஒரு சட்டத்துறை சார்ந்தது ஆணைக்குழு இதனை விசாரிக்க வேண்டும் என கூறி விலகி இருப்பது எதிர்காலத்தில் பொருத்தமற்ற விடயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அதேவேளை, வடமாகாணத்தில் இருக்கின்ற வைத்தியசாலைகளினுடைய தேவைகளுக்கு புலம்பெயர்ந்தோரிடம் இருந்து உதவிகள் கிடைக்கப்படுவதாகவும் கடந்த காலங்களில் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு என்டர்ஸ் கோப் மிசினை புலம்பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருக்கும் என்டர்ஸ் கோப் மிசினை அனுராதபுரத்திற்கு மாற்றுவதற்கு அங்குள்ள பணிப்பாளர் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இதனை முற்றிலும் தாம் எதிர்ப்பதாகவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.அரசாங்கங்களினால் செய்ய முடியாதவற்றை எமது பிரதேசத்தில் தற்போது ஒரு சில புலம் பெயர்ந்தோரால் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ள என்டர்ஸ் கோப் மிசினை அநுராதபுரத்திற்கு மாற்ற முடியாது என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement