• May 05 2024

இத செய்யுங்கள்- பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும்!

Tamil nila / Dec 16th 2022, 10:03 pm
image

Advertisement

எரிபொருளை எவ்வாறு சேமிப்பது. எரிபொருள் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பதற்கான சில குறிப்புகளை அறிந்துக்கொள்ளுங்கள்.

பெட்ரோல் டீசல் விலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்,"மத்தியில் மோடி அரசு (2014 ஆம் ஆண்டு முதல்) ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் இருக்கிறது. கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக்குறைவுதான்.  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறையாவது எனத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் முக்கியான ஒன்று. அதேபோல எரிபொருள்களை நாம் அதிகளவு உபயோகிக்கும் போது சுற்றுசூழலும் அதிக அளவில் மாசு படுகிறது. ஒருப்பக்கம் அதிக பணமும் செலவாகிறது. மறுப்பக்கம் நமக்கும் கேடு விளைவிக்கிறது. எரிபொருளைச் சேமிப்பது பணத்தைச் சேமிப்பதற்கு மட்டுமல்ல, மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.


எப்படி எரிபொருளைச் சேமிப்பது, அதற்கு செலவழிக்கும் பணத்தை எப்படி மிச்சப்படுத்து, மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

இரவில் அல்லது அதிகாலையில் எரிபொருள் நிரப்பவும்

இது பலருக்கு தெரியாத ஒரு விசியமாகும். நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை மற்றும் இரவு நேரம் சிறந்தாதாக இருக்கும். பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதால், பகல் நேரத்தில் வெப்பத்தின் காரணமாக பூமியும் வெப்பமடையும். இதனால் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் சூடாகும். அதேநேரத்தில் அதில் இருக்கும் எரிபொருளும் சூடாகி அதன் அடர்த்தி குறையும். அடர்த்தி குறைந்த எரிபொருள் வாகனத்திற்கு போடும் போது மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே பெட்ரோல் போடா சிறந்த நேரம் அதிகாலை அல்லது இரவு ஆகும்.

உங்கள் பெட்ரோல்/டீசல் டேங்க் பாதி அளவு இருக்கும் போதே நிரப்புவது மிக முக்கியமான ஒன்றாகும். இதை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அறிவியல் காரணம் உள்ளது. உங்கள் டேங்க்கில் அதிக பெட்ரோல்/டீசல் இருந்தால், அதன் காலி இடத்தை குறைந்த காற்று ஆக்கிரமிக்கிறது. பெட்ரோல்/டீசல் காற்றில் கலக்கும் போது வேகமாக ஆவியாகிவிடும்.

பெட்ரோல்/டீசல் லாரி டேங்கர்கள் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளை நிரப்பும்போது எரிபொருள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனுக்கு கீழே படிந்திருக்கும் அனைத்து தூசுகளும், துகள்களும் மேல்நோக்கி வரும். அந்த சமயத்தில் நீங்கள் உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல்/டீசல் போட்டால் உங்கள் எரிபொருள் டேங்க்கிற்குள் செல்லலாம். அதன் காரணமாக வாகனத்தின் இயந்திரம் பாதிக்கக்கூடும்.

டயரின் காற்றின்  அழுத்தத்தை சரிபார்த்தல்

டயரில் இருக்கும் காற்றின் அழுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். இது வாகனம் ஓட்டும் போது இழுவை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் மைலேஜ் அதிகரிக்கும். 

சீரான இடைவெளியில் வாகனத்தை சர்வீஸ் செய்யுங்கள்

கார் அல்லது இருசக்கர வாகனத்தை நேரத்திற்கு ஏற்ப சர்வீஸ் செய்ய வேண்டும். எண்ணெய், ஆயில் ஃபில்டர் & ஏர் ஃபில்டர் ஆகியவற்றை சரியான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருங்கள். இதனால் அதிக மைலேஜ் கிடைக்கும் மற்றும் எரிபொருள் பயன்பாடும் சிக்கனமாக இருக்கும்.

இத செய்யுங்கள்- பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும் எரிபொருளை எவ்வாறு சேமிப்பது. எரிபொருள் பயன்பாட்டை எவ்வாறு குறைப்பது என்பதற்கான சில குறிப்புகளை அறிந்துக்கொள்ளுங்கள்.பெட்ரோல் டீசல் விலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்,"மத்தியில் மோடி அரசு (2014 ஆம் ஆண்டு முதல்) ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் என்பது குறைந்த அளவில்தான் இருக்கிறது. கடைசி எட்டு ஆண்டுகளில் விலையேற்றம் என்பது மிகக்குறைவுதான்.  பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை மட்டும் குறையாவது எனத் தெளிவாகத் தெரிகிறது.எனவே பெட்ரோல் டீசல் விலையை மனதில் கொண்டு எரிபொருள் சிக்கனம் என்பது மிகவும் முக்கியான ஒன்று. அதேபோல எரிபொருள்களை நாம் அதிகளவு உபயோகிக்கும் போது சுற்றுசூழலும் அதிக அளவில் மாசு படுகிறது. ஒருப்பக்கம் அதிக பணமும் செலவாகிறது. மறுப்பக்கம் நமக்கும் கேடு விளைவிக்கிறது. எரிபொருளைச் சேமிப்பது பணத்தைச் சேமிப்பதற்கு மட்டுமல்ல, மாசுபாட்டைக் குறைக்கவும் உதவும்.எப்படி எரிபொருளைச் சேமிப்பது, அதற்கு செலவழிக்கும் பணத்தை எப்படி மிச்சப்படுத்து, மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.இரவில் அல்லது அதிகாலையில் எரிபொருள் நிரப்பவும்இது பலருக்கு தெரியாத ஒரு விசியமாகும். நாம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப சரியான நேரம் அதிகாலை மற்றும் இரவு நேரம் சிறந்தாதாக இருக்கும். பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதால், பகல் நேரத்தில் வெப்பத்தின் காரணமாக பூமியும் வெப்பமடையும். இதனால் நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் கொள்கலன் சூடாகும். அதேநேரத்தில் அதில் இருக்கும் எரிபொருளும் சூடாகி அதன் அடர்த்தி குறையும். அடர்த்தி குறைந்த எரிபொருள் வாகனத்திற்கு போடும் போது மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே பெட்ரோல் போடா சிறந்த நேரம் அதிகாலை அல்லது இரவு ஆகும்.உங்கள் பெட்ரோல்/டீசல் டேங்க் பாதி அளவு இருக்கும் போதே நிரப்புவது மிக முக்கியமான ஒன்றாகும். இதை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அறிவியல் காரணம் உள்ளது. உங்கள் டேங்க்கில் அதிக பெட்ரோல்/டீசல் இருந்தால், அதன் காலி இடத்தை குறைந்த காற்று ஆக்கிரமிக்கிறது. பெட்ரோல்/டீசல் காற்றில் கலக்கும் போது வேகமாக ஆவியாகிவிடும்.பெட்ரோல்/டீசல் லாரி டேங்கர்கள் பெட்ரோல் நிலையத்தில் எரிபொருளை நிரப்பும்போது எரிபொருள் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனுக்கு கீழே படிந்திருக்கும் அனைத்து தூசுகளும், துகள்களும் மேல்நோக்கி வரும். அந்த சமயத்தில் நீங்கள் உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல்/டீசல் போட்டால் உங்கள் எரிபொருள் டேங்க்கிற்குள் செல்லலாம். அதன் காரணமாக வாகனத்தின் இயந்திரம் பாதிக்கக்கூடும்.டயரின் காற்றின்  அழுத்தத்தை சரிபார்த்தல்டயரில் இருக்கும் காற்றின் அழுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். இது வாகனம் ஓட்டும் போது இழுவை குறைக்க உதவுகிறது. இதனால் உங்கள் மைலேஜ் அதிகரிக்கும். சீரான இடைவெளியில் வாகனத்தை சர்வீஸ் செய்யுங்கள்கார் அல்லது இருசக்கர வாகனத்தை நேரத்திற்கு ஏற்ப சர்வீஸ் செய்ய வேண்டும். எண்ணெய், ஆயில் ஃபில்டர் & ஏர் ஃபில்டர் ஆகியவற்றை சரியான இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருங்கள். இதனால் அதிக மைலேஜ் கிடைக்கும் மற்றும் எரிபொருள் பயன்பாடும் சிக்கனமாக இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement