• May 18 2024

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லையா? இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

Chithra / Jul 17th 2023, 9:00 pm
image

Advertisement

2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 முதல் 8 வீதம் வரை குறையும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லையா இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia 2027ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இதேநேரம் அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7 முதல் 8 வீதம் வரை குறையும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement