• May 05 2024

பௌத்த மத நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் கட்டுப்படுத்துகின்றதா..! அரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட தேரர்.! samugammedia

Sharmi / May 28th 2023, 2:36 pm
image

Advertisement

மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு 2023ஆம் ஆண்டுக்கான தேசிய பொசன் விழாவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அங்கு பல குறைபாடுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மிஹிந்தலை புனித தலத்தை மையமாக கொண்டு இவ்வருடம் நடைபெறவுள்ள அரச பொசன் விழாவிற்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு என வணக்கத்திற்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு பொசன் விழாவிற்கு, அரசாங்கம் உரிய பங்களிப்பை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் சிக்குண்டிருந்தாலும் நிதி சம்பந்த விடயத்தில் சரியான முகாமைத்துவம் அவசியம்.தேவையில்லாத விடயங்களுக்கு நிதி விண்விரயமாக்கப்படுகின்றது.
ஆனால் இவ்வாறான புனித விழாக்களின் போது இலங்கையின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.

அதற்காக அதிக நிதியினை பயன்படுத்துமாறு கோரவில்லை.இந்த நிகழ்வை சரியான முறையில் ஒழுங்குபடுத்துமாறே கோருகின்றோம்.

இது இந்த நாட்டு மக்களின் தேவை என்பதை, இன்று வரை நாட்டை ஆள்பவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

தற்போது மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் இருளில் மூள்கியுள்ளன. இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை
அதனால் நான் சில நேரங்களில் நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியம் இவற்றைக் கட்டுப்படுத்துகிறதா என்று. இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை பேணிக்காக்கவும், இந்த பௌத்த ஒழுங்கைப் பாதுகாக்கவும், அதனை பாதுகாக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

பௌத்த மத நிகழ்வுகளை சர்வதேச நாணய நிதியம் கட்டுப்படுத்துகின்றதா. அரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட தேரர். samugammedia மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை மையமாக கொண்டு 2023ஆம் ஆண்டுக்கான தேசிய பொசன் விழாவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.எனினும் அங்கு பல குறைபாடுகள் காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.மிஹிந்தலை புனித தலத்தை மையமாக கொண்டு இவ்வருடம் நடைபெறவுள்ள அரச பொசன் விழாவிற்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு என வணக்கத்திற்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டு பொசன் விழாவிற்கு, அரசாங்கம் உரிய பங்களிப்பை வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.நாடு பொருளாதார ரீதியில் சிக்குண்டிருந்தாலும் நிதி சம்பந்த விடயத்தில் சரியான முகாமைத்துவம் அவசியம்.தேவையில்லாத விடயங்களுக்கு நிதி விண்விரயமாக்கப்படுகின்றது.ஆனால் இவ்வாறான புனித விழாக்களின் போது இலங்கையின் அனைத்து மூலைகளிலிருந்தும் மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள். அதற்காக அதிக நிதியினை பயன்படுத்துமாறு கோரவில்லை.இந்த நிகழ்வை சரியான முறையில் ஒழுங்குபடுத்துமாறே கோருகின்றோம்.இது இந்த நாட்டு மக்களின் தேவை என்பதை, இன்று வரை நாட்டை ஆள்பவர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. தற்போது மிஹிந்தலை, அனுராதபுரம் மற்றும் தந்திரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் இருளில் மூள்கியுள்ளன. இதற்கு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை அதனால் நான் சில நேரங்களில் நினைக்கிறேன். சர்வதேச நாணய நிதியம் இவற்றைக் கட்டுப்படுத்துகிறதா என்று. இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தை பேணிக்காக்கவும், இந்த பௌத்த ஒழுங்கைப் பாதுகாக்கவும், அதனை பாதுகாக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement