• Nov 25 2024

புதிய கடற்தொழில் சட்டம் தொடர்பில் மக்களை குழப்ப வேண்டாம் - கிராமிய சங்கங்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 15th 2023, 7:39 pm
image

புதிய கடற்தொழில் சட்டம்  சட்ட வரைவாக பாராளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில்  மீனவ மக்களை  குழப்ப வேண்டாம் என யாழ்ப்மாண மாவட்ட கடல்  தொழிலாளர் கிராமிய அமைப்புகளில் சங்கத் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார்.

இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள  கடற்தொழிலாளர் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய கடற்தொழில்  சட்டங்களால்  ஆபத்து என சிலர் மக்களிடம் தெரிவித்து கையெழுத்தும் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய கடற்தொழில் சட்டமானது வரைவாகவே இன்னும் உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம் பெற்ற பின்னரே சட்டமாகும்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மீனவர்களுக்கு எதிரான விடையங்கள் இருக்குமாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிப்பார்கள்.

ஆனால் புதிய சட்டத்தில்  ஆபத்து உள்ளது என   சிலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து வாங்குவது மீனவ சமூகத்தை குழப்பம் முயற்சியில் ஈடுபடுவதும் சிலரின்  தனிப்பட்ட தேவைகளை  நிறைவேற்றுவதற்காகவா என எண்ணத் தோன்றுகிறது .

எமது மீனவர்களுகு ஆபத்தை விளாவிக்கும் சட்டங்களை நாமும் ஆதரிக்கப் போவதில்லை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஆராய்ந்து எமது கருத்துக்களை முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய கடற்தொழில் சட்டம் தொடர்பில் மக்களை குழப்ப வேண்டாம் - கிராமிய சங்கங்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு.samugammedia புதிய கடற்தொழில் சட்டம்  சட்ட வரைவாக பாராளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத நிலையில்  மீனவ மக்களை  குழப்ப வேண்டாம் என யாழ்ப்மாண மாவட்ட கடல்  தொழிலாளர் கிராமிய அமைப்புகளில் சங்கத் தலைவர் நற்குணம் வேண்டுகோள் விடுத்தார்.இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள  கடற்தொழிலாளர் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,புதிய கடற்தொழில்  சட்டங்களால்  ஆபத்து என சிலர் மக்களிடம் தெரிவித்து கையெழுத்தும் வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.புதிய கடற்தொழில் சட்டமானது வரைவாகவே இன்னும் உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம் பெற்ற பின்னரே சட்டமாகும்.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மீனவர்களுக்கு எதிரான விடையங்கள் இருக்குமாயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிப்பார்கள்.ஆனால் புதிய சட்டத்தில்  ஆபத்து உள்ளது என   சிலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து வாங்குவது மீனவ சமூகத்தை குழப்பம் முயற்சியில் ஈடுபடுவதும் சிலரின்  தனிப்பட்ட தேவைகளை  நிறைவேற்றுவதற்காகவா என எண்ணத் தோன்றுகிறது .எமது மீனவர்களுகு ஆபத்தை விளாவிக்கும் சட்டங்களை நாமும் ஆதரிக்கப் போவதில்லை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் ஆராய்ந்து எமது கருத்துக்களை முன்வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement