• Nov 13 2024

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மருத்துவர் மொஹமட் ஷாபி விடுதலை!

Chithra / Nov 6th 2024, 12:36 pm
image

 

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்

2019 ஆம் ஆண்டில், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாகக் கூறி டாக்டர் ஷஃபி கைதுசெய்யப்பட்டார். 

அறுவைசிகிச்சை, பிரசவத்தின்போது சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு தரப்பினரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பின்னர் அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்

ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மருத்துவர் மொஹமட் ஷாபி விடுதலை  குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு வைத்திய நிபுணர் ஷிஹாப்தீன் மொஹமட் ஷாபியை விடுதலை செய்து குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.மருத்துவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுதலை செய்யப்படுவதாக நீதவான் அறிவித்துள்ளார்2019 ஆம் ஆண்டில், சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்ததாகக் கூறி டாக்டர் ஷஃபி கைதுசெய்யப்பட்டார். அறுவைசிகிச்சை, பிரசவத்தின்போது சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக பல்வேறு தரப்பினரும் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.பின்னர் அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார்ஷாபி சிஹாப்தீனுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement