• May 01 2024

பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு மது விருந்து..! - மாணவ மாணவிகளுக்கு நேர்ந்த கதி

Chithra / Apr 1st 2024, 10:15 am
image

Advertisement

வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து கைவிடப்பட்ட கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்

மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அந்த கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு மது விருந்து. - மாணவ மாணவிகளுக்கு நேர்ந்த கதி வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து கைவிடப்பட்ட கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் அந்த கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement