• May 18 2024

உயிர்த்த ஞாயிறு நட்டஈடு: மைத்திரி, பூஜித தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 14th 2023, 12:21 pm
image

Advertisement


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (14) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா பணத்தில் 15 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட 75 மில்லியன் ரூபாவில் 1,725,588 மில்லியன் ரூபாவும், 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்க உத்தரவிடப்பட்ட 50 மில்லியன் ரூபாவில் 5 மில்லியன் ரூபாவும்,

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டிய 75 மில்லியன் ரூபா பணத்தில் 4.1 மில்லியன் ரூபாவும், 

பொலிஸ் உத்தியோகத்தர் சிசிர மெண்டிஸுக்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் ரூபா தற்போது வைப்பிலிடப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு நட்டஈடு: மைத்திரி, பூஜித தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு. samugammedia உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையில் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று (14) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அமைச்சர் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க வேண்டிய 100 மில்லியன் ரூபா பணத்தில் 15 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.மேலும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட 75 மில்லியன் ரூபாவில் 1,725,588 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு வழங்க உத்தரவிடப்பட்ட 50 மில்லியன் ரூபாவில் 5 மில்லியன் ரூபாவும்,பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட வேண்டிய 75 மில்லியன் ரூபா பணத்தில் 4.1 மில்லியன் ரூபாவும், பொலிஸ் உத்தியோகத்தர் சிசிர மெண்டிஸுக்கு வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய ஒரு மில்லியன் ரூபா தற்போது வைப்பிலிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement