• Nov 26 2024

குப்பை மேட்டுக்கு வரும் யானை - அருகில் குடியிருப்போர் அச்சம்..!samugammedia

Tharun / Feb 3rd 2024, 6:54 pm
image

கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம்  சின்னத் தோட்டம்  பகுதியில் கிண்ணியா  நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை சின்னத் தோட்ட பகுதியில் கொட்டுவதனால், கழிவுகளை உண்ண வருகின்ற யானை அருகில் குடியிருப்பவர்களின் குடியிருப்புகளுக்கு வந்து தம்மையும் தமது தோட்ட பயிர்களையும் அழித்து விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலி கடந்த சில வருடங்களாக இயங்காததனால் குப்பை மேட்டுக்கு வருகின்ற யானை வீடுகளுக்கு வருமென  அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இந்த யானை வீடுகளையும் விட்டுத் தோட்ட பயிர்களையும் அழித்துள்ளதாக கூறுகின்றனர்.  இப்பொழுது மின்சார வேலி  இல்லாதபடியினால் மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர். தென்னை, வாழை, மரவள்ளி முதலான பயிர்களை அளித்து விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மின்சார வேலியை அமைத்துத் தருமாறு அம்மக்கள் தெரிவிப்பதோடு தமக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் அவர்கள்  கூறுகின்றனர்.

குப்பை மேட்டுக்கு வரும் யானை - அருகில் குடியிருப்போர் அச்சம்.samugammedia கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பாரதிபுரம்  சின்னத் தோட்டம்  பகுதியில் கிண்ணியா  நகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை சின்னத் தோட்ட பகுதியில் கொட்டுவதனால், கழிவுகளை உண்ண வருகின்ற யானை அருகில் குடியிருப்பவர்களின் குடியிருப்புகளுக்கு வந்து தம்மையும் தமது தோட்ட பயிர்களையும் அழித்து விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.தற்பொழுது இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலி கடந்த சில வருடங்களாக இயங்காததனால் குப்பை மேட்டுக்கு வருகின்ற யானை வீடுகளுக்கு வருமென  அச்சம் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே இந்த யானை வீடுகளையும் விட்டுத் தோட்ட பயிர்களையும் அழித்துள்ளதாக கூறுகின்றனர்.  இப்பொழுது மின்சார வேலி  இல்லாதபடியினால் மீண்டும் தமது குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர். தென்னை, வாழை, மரவள்ளி முதலான பயிர்களை அளித்து விடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மின்சார வேலியை அமைத்துத் தருமாறு அம்மக்கள் தெரிவிப்பதோடு தமக்கு பாதுகாப்பு தரவேண்டும் எனவும் அவர்கள்  கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement