• May 18 2024

கடற்றொழிலாளர்களே உணர்ந்து செயற்படுங்கள்...! கடல்வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது...! சபையில் அமைச்சர் டக்ளஸ் ....!samugammedia

Sharmi / Nov 7th 2023, 10:45 pm
image

Advertisement

கடல் வளங்களை பாதிக்கின்ற தொழில் முறைகளில் ஈடுபடுவதை கடற்றொழிலாளர்கள் உணர்ந்து அதனை தவிர்த்துக்கொள்ளாவிட்டால்  கடல் வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றம் செய்வது தொடர்பிலான வரைபினை இன்று(07) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


கடற்றொழில் அமைச்சு என்ற வகையில் மேற்கொள்கின்ற சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்ட வரைபுகள் யாவும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பிலான நலன்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.


கடற்றொழிலாளர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, எமது கடல் வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருந்து வருகிறோம்.


அண்மையில் தென் கொரியா நாட்டில் 41 கடற்றொழில் சார்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாடு ;ஒரே சமுத்திரம், ஒரே கடற்றொழில் சமூகம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. 


இதில் நானும் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இலங்கை சார்பாக உத்தியோகப்பூர்வமாக கலந்து கொண்டிருந்தேன்.


இந்த மாநாட்டின்போது கருத்துக்களை முன்வைத்திருந்த உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர்.


அதாவது, கடல் வெப்பமயமாகல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள், அதிகளவிலான கடலுணவுகளை அறுவடைச் செய்தல், கழிவுகளை கடலில் கொட்டுவதால் கடல் மாசடைதல், சூழல் மாசடைதல் போன்ற காரணிகள் காரணமாக எதிர்காலத்தில் கடலில் மீனினங்கள் குறைந்து போகின்ற அபாயம் தென்படுவதாகவும், எனவே, நாம் நன்னீர் வேளாண்மையினை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.


அதேநேரம், ஒரு கிலோ இறைச்சியை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அதற்கென 8 கிலோ உணவினை செலவிட வேண்டும் என்றும், ஆனால், ஒரு கிலோ நன்னீர் வேளாண்மையைப் பெற வேண்டுமானால், 1.2 கிலோ  உணவினை செலவிட்டால் போதுமானது என்றும், மேலும், நன்னீர் வேளாண்மையானது, செலவு குறைந்ததும், அதிக சத்து கூடியதுமான உணவாகும் என்றும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த கருத்து அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதற்கு முன்பதாக இதனை நான் உணர்ந்து கொண்ட நிலையில் நன்னீர் வேளாண்மையினை இந்த நாட்டில் பரவலாக முன்னெடுப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.


அதே நேரம், கடல் வளங்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதையும் நாம் இயன்றவரை தடுக்க வேண்டும். எனவே கடற்றொழில் தொடர்பில் உரிய முகாமைத்துவத்தினை மேலும் பலப்படுத்தி, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி, கடற்றொழில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது.


கடற்றொழில் தொடர்பில் ஒழுங்குவிதிகளையோ, புதிய சட்டங்களையோ கொண்டுவர வேண்டுமானால் , அதனை தாமே தீர்மானிக்க வேண்டும் என துறைசார்ந்த ஒரு சிலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் இதன்போது இல்லாமல் இல்லை.


'திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் இருக்கின்றது.


அந்த வகையில் கடற்றொழிலாளர்களே உணர்ந்து, கடல் வளங்களை பாதிக்கின்ற தொழில் முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்கள் திருந்தாவிட்டால், கடல் வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது என்பது எனது நிலைப்பாடாகும்.


கடற்றொழிலாளர்கள் எல்லோரும் இல்லாவிட்டாலும், ஒரு சிலர் மேற்கொள்கின்ற சில செயற்பாடுகள் காரணமாக கடல் வளங்கள் பாதிக்கப்படுவதையும் எமது கவனத்திற்கு அன்றாடம் கொண்டுவரப்படாமல் இல்லை. 


எனவே, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் எமது கடல் வளத்தினை முகாமைத்துவம் செய்வதை மேலும் பலப்படுத்துவதற்காகவும், அபிவிருத்தி செய்வதற்குமாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


இதன் பிரகாரம், இன்று சமர்ப்பிக்கப்படுகின்ற வரைபின் மூலமாக 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தைக் கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 14 ஊ எனும் சரத்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் சரத்து புதிதாக சேர்க்கப்படுகின்றது.


தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் 14 ஊ எனும் சரத்தின் பிரகாரம், ஏதேனும் அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, பிற நாடுகளின் கடற் பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் அன்றி, எவரேனும் நபர்  ஒருவரால் இப்பிரிவின் கீழ் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கின்ற தேசிய கடற்றொழில் படகினைக் கொண்டு, வேறொரு நாட்டின் தேசிய நீதிமன்ற அதிகாரப் பிரிவிற்குள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அப் படகினை பயன்படுத்துவது அல்லது பயன்படுத்துவதற்கு வழிசமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலே குறிப்பிடப்பட்டுள்ள உப பிரிவின் விதிமுறைகளை மீறுகின்ற எவரேனும் நபரொருவர் இச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாவார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  இங்கு எவரேனும் நபர் என்ற பதத்திற்கு உரிய வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


இது தொடர்பில் பலநாட் களங்களின் உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர். 


அதாவது, கடற்றொழில் படகொன்று ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டால் அதனது அனுமதிப் பத்திரதாரர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்.


அந்த சட்டவிரோத செயற்பாடு கடற்றொழில் படகின் அனுமதிப் பத்திரதாரருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அனுமதிப் பத்திரதாரர், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். 


ஆனால், தனது உரிமையாளரோ, ஓட்டியோ, பணியாளர்களோ அல்லது அதில் பயணிக்கின்ற நபர்களோ சட்ட நடவடிக்கைகளிலிருந்து நழுவப்பட்டு விடுகின்றனர்.


அவ்வாறு நழுவுகின்ற ஓட்டி, பணியாளர்கள், ஏனைய பயணிக்கின்ற நபர்கள் மறுதினமே வேறு கடற்றொழில் படகுகளில் தொழிலுக்குச் சென்றுவிடுகின்றனர். 


எனவே, அவர்களையும் குற்றவாளிகளாக சேர்த்து சட்டம் வகுக்கப்படல் வேண்டும். அவ்வாறு சட்டம் வகுக்கப்பட்டால்தான் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலும் என அவர்கள் தெரிவித்தனர்.  


அந்த வகையில், நாமும் இது தொடர்பில் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தில் அனுமதிப்பத்திரதாரர் என்ற பதத்திற்கு பதிலாக படகின் உரிமையாளர் என்றும், அந்தப் படகுக்கென வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தைக் கொண்டவர், படகின் ஓட்டி, அப் படகின் பணியாளர்களில் எவரேனும் உறுப்பினர், அக் குற்றம் நிகழ்த்தப்பட்ட தருவாயில் அப்படகில் இருந்த எவரேனும் நபர் உள்ளடங்களாக குற்றவாளிகளாக்கப்படுகின்ற வகையில் இத்திருத்தத்தை வகுத்துள்ளோம்.


எனினும், அவர்கள், அக் குற்றம் மேற்கொள்ளப்பட்டமையானது தான் அறிந்திராத வகையில் என்றோ அல்லது, அக் குற்றம் இடம்பெறுவதைத் தடுப்பதற்கென தன்னால் உரிய அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவோ ஒப்புவிக்கப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால், அவ்வாறு ஒப்புவிக்கப்படுகின்ற காரணிகள் நிரூபிக்கப்படுகின்ற எவரேனும் நபர் அக் குற்றத்திற்கென குற்றவாளியாகக் கருதப்படமாட்டார்.


என்ற போதிலும், படகின் உரிமையாளரினை இத்தகைய குற்றங்கள் குறித்து குற்றவாளியாக்கப்பட வேண்டாம் என பலநாள் கலங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டாலும், இது தொடர்பில் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று உயர் நீதிமன்றம் அவர்களது அக் கோரிக்கையினை நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


மேற்குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு மேலாக, புதிதாக அறிமுகஞ் செய்யப்படுகின்ற இச் சட்டத்தின் ஐஐ அ பிரிவின் 14 சரத்தின் கீழ் இலங்கைக் கடற் பரப்பிற்குள் அல்லது ஆழ் கடலில் ஏதேனும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழில் செயற்பாடுகளை தடை செய்வதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 


இதன்படி, இலங்கைக் கடற்பரப்பில் அல்லது ஆழ் கடலில் ஏதேனும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழிலினை மேற்கொள்கின்ற நபரொருவரின், மேற்படி கடற்றொழில் செயற்பாட்டுக்கென பயன்படுத்திய கடற்றொழில் படகானது, கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய கடற்றொழில் படகென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால்  நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்ற சந்தர்ப்பங்களின்போது, சந்தர்ப்பத்திற்கேற்ப, அந்த நபருக்கோ அல்லது அப் படகின் உரிமையாளருக்கோ விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், கடற்றொழில் செயற்பாட்டு அனுமதிப் பத்திரத்தினையும், தேசிய படகினை  பதிவு செய்கின்ற சான்றிதழையும் இடைநிறுத்துவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. 


அதுபோன்றே, கடற்றொழில் சட்டத்தின் 46வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமிக்க பதவி சார்ந்தோர்களது அதிகாரங்களுக்கு தடையேற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களின்போது, படகின் நீளத்தினை கருத்தில் கொண்டு  தண்டனைக்கு உட்படுத்துவது போன்றே, படகொன்று இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்ற தொழில் சார்ந்த குற்றங்களின்போதும் தண்டனைக்கு உட்படுத்துவதற்கான விதிமுறைகள் இந்த திருத்தத்தின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன.


மேலும், இந்த முன்மொழிவு திருத்தத்தின் மூலம் பிரதான நியதிச் சட்டத்தில் 49 ஆ மற்றும் 49 இ எனும் புதிய சரத்துகள் உட்படுத்தப்படுவதுடன், இந்த சரத்துகளின் மூலம் பிரதான நியதிச் சட்டத்தின் 14 ச சரத்து அல்லது (பிரதான நியதிச் சட்டத்தின் மூலம் வகுக்கப்பட்ட ஏதேனும் கட்டளை தவிர்ந்து) பிரதான நியதிச் சட்டத்தில் ஏதேனும் ஒழுங்குவிதிகளை மீறுகின்ற எவரேனும் நபர் தொடர்பில் இந்த சட்டத்தில் குறிப்பிடத்தக்கதாக தண்டனையொன்று குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தின்போது, தண்டனை வழங்குவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.


இந்த முன்மொழிவு திருத்தத்தின் மூலம், தற்போதைய கடற்றொழில் சட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரி என்பதற்கு கடற்றொழில் சட்டத்தின் 46 (1) உப சரத்தின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுகின்ற கடற்றொழில் பரிசோதகர்களின் பதவி நிலைக்குக் குறையாத அதிகாரிகளும், சார்ஜன்ட் பதவி நிலைக்குக் குறையாத இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், விமானப் படை அதிகாரிகளும், சிறு அதிகாரிகள் பதவி நிலைக்குக் குறையாத இலங்கை கடற்படையின் அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 


மேலும், இந்தத் திருத்தத்தின் மூலம் 2009 41ஆம் இலக்கத்தைக் கொண்ட கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எவரேனும், கடலோரப் பாதுகாப்பு அதிகாரி என்ற வகையில் அதிகாரமிக்க அதிகாரி என்ற வரைவிலக்கணத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளார். 



அவ்வாறே, சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் ஓட்டி என்பதையும் வரைவிலக்கணம் செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மற்றும் ஓட்டி என்பதையும் வரைவிலக்கணம் செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.


மேலும், நாம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் மேற்கொண்டு, அதனை ஒட்டுமொத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டமாகக் கொண்டுவர உள்ளோம். அதனை ஒரு வரைபாக தற்போது துறைசார்ந்த உரித்தாளர்களின் கருத்தறிதலுக்காகவும், ஆலோசனைக்களுக்காகவும் கடற்றொழில் சார்ந்த சமூகத்தினரிடையே முன்வைத்து வருகின்றோம்.


இது ஒரு வரைபு என்பதை உணராத அல்லது அறியாத ஒரு சிலர் தற்போதே பலத்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது சுயலாப அரசியல் சார்ந்த விமர்சனங்களே அன்றி வேறொன்றுமில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.


இந்த புதிய திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் காழ்ப்புணர்ச்சி கொண்ட விமர்சனங்களை காற்று வாக்கில் ஊதிக் கொண்டிராமல், உங்களது ஆரோக்கியமான கருத்துக்களை எழுத்து மூலமாக எமக்குக் கையளித்தால் அவற்றையும் நாம் அந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்ட திருத்தத்தில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.











கடற்றொழிலாளர்களே உணர்ந்து செயற்படுங்கள். கடல்வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது. சபையில் அமைச்சர் டக்ளஸ் .samugammedia கடல் வளங்களை பாதிக்கின்ற தொழில் முறைகளில் ஈடுபடுவதை கடற்றொழிலாளர்கள் உணர்ந்து அதனை தவிர்த்துக்கொள்ளாவிட்டால்  கடல் வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மாற்றம் செய்வது தொடர்பிலான வரைபினை இன்று(07) நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடற்றொழில் அமைச்சு என்ற வகையில் மேற்கொள்கின்ற சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்ட வரைபுகள் யாவும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பிலான நலன்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.கடற்றொழிலாளர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு, எமது கடல் வளங்களை பேணிப் பாதுகாக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் இருந்து வருகிறோம்.அண்மையில் தென் கொரியா நாட்டில் 41 கடற்றொழில் சார்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாடு ;ஒரே சமுத்திரம், ஒரே கடற்றொழில் சமூகம்' என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது. இதில் நானும் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இலங்கை சார்பாக உத்தியோகப்பூர்வமாக கலந்து கொண்டிருந்தேன்.இந்த மாநாட்டின்போது கருத்துக்களை முன்வைத்திருந்த உலக உணவு மற்றும் விவசாய அமைப்பினர் ஒரு விடயத்தை சுட்டிக் காட்டியிருந்தனர்.அதாவது, கடல் வெப்பமயமாகல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள், அதிகளவிலான கடலுணவுகளை அறுவடைச் செய்தல், கழிவுகளை கடலில் கொட்டுவதால் கடல் மாசடைதல், சூழல் மாசடைதல் போன்ற காரணிகள் காரணமாக எதிர்காலத்தில் கடலில் மீனினங்கள் குறைந்து போகின்ற அபாயம் தென்படுவதாகவும், எனவே, நாம் நன்னீர் வேளாண்மையினை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டது.அதேநேரம், ஒரு கிலோ இறைச்சியை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், அதற்கென 8 கிலோ உணவினை செலவிட வேண்டும் என்றும், ஆனால், ஒரு கிலோ நன்னீர் வேளாண்மையைப் பெற வேண்டுமானால், 1.2 கிலோ  உணவினை செலவிட்டால் போதுமானது என்றும், மேலும், நன்னீர் வேளாண்மையானது, செலவு குறைந்ததும், அதிக சத்து கூடியதுமான உணவாகும் என்றும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.இந்த கருத்து அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இதற்கு முன்பதாக இதனை நான் உணர்ந்து கொண்ட நிலையில் நன்னீர் வேளாண்மையினை இந்த நாட்டில் பரவலாக முன்னெடுப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.அதே நேரம், கடல் வளங்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதையும் நாம் இயன்றவரை தடுக்க வேண்டும். எனவே கடற்றொழில் தொடர்பில் உரிய முகாமைத்துவத்தினை மேலும் பலப்படுத்தி, அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி, கடற்றொழில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகின்றது.கடற்றொழில் தொடர்பில் ஒழுங்குவிதிகளையோ, புதிய சட்டங்களையோ கொண்டுவர வேண்டுமானால் , அதனை தாமே தீர்மானிக்க வேண்டும் என துறைசார்ந்த ஒரு சிலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்ற சந்தர்ப்பங்களும் இதன்போது இல்லாமல் இல்லை.'திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் இருக்கின்றது.அந்த வகையில் கடற்றொழிலாளர்களே உணர்ந்து, கடல் வளங்களை பாதிக்கின்ற தொழில் முறைகளில் ஈடுபடுவதை தவிர்த்து, அவர்கள் திருந்தாவிட்டால், கடல் வளங்களை பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியாது என்பது எனது நிலைப்பாடாகும்.கடற்றொழிலாளர்கள் எல்லோரும் இல்லாவிட்டாலும், ஒரு சிலர் மேற்கொள்கின்ற சில செயற்பாடுகள் காரணமாக கடல் வளங்கள் பாதிக்கப்படுவதையும் எமது கவனத்திற்கு அன்றாடம் கொண்டுவரப்படாமல் இல்லை. எனவே, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் எமது கடல் வளத்தினை முகாமைத்துவம் செய்வதை மேலும் பலப்படுத்துவதற்காகவும், அபிவிருத்தி செய்வதற்குமாக இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் பிரகாரம், இன்று சமர்ப்பிக்கப்படுகின்ற வரைபின் மூலமாக 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்கத்தைக் கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 14 ஊ எனும் சரத்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் சரத்து புதிதாக சேர்க்கப்படுகின்றது.தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் 14 ஊ எனும் சரத்தின் பிரகாரம், ஏதேனும் அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, பிற நாடுகளின் கடற் பரப்புகளில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் அன்றி, எவரேனும் நபர்  ஒருவரால் இப்பிரிவின் கீழ் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருக்கின்ற தேசிய கடற்றொழில் படகினைக் கொண்டு, வேறொரு நாட்டின் தேசிய நீதிமன்ற அதிகாரப் பிரிவிற்குள் கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அப் படகினை பயன்படுத்துவது அல்லது பயன்படுத்துவதற்கு வழிசமைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலே குறிப்பிடப்பட்டுள்ள உப பிரிவின் விதிமுறைகளை மீறுகின்ற எவரேனும் நபரொருவர் இச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாவார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  இங்கு எவரேனும் நபர் என்ற பதத்திற்கு உரிய வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.இது தொடர்பில் பலநாட் களங்களின் உரிமையாளர் சங்கத்தினர் தொடர்ந்து பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர். அதாவது, கடற்றொழில் படகொன்று ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டால் அதனது அனுமதிப் பத்திரதாரர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார்.அந்த சட்டவிரோத செயற்பாடு கடற்றொழில் படகின் அனுமதிப் பத்திரதாரருக்குத் தெரியாமல் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அனுமதிப் பத்திரதாரர், சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார். ஆனால், தனது உரிமையாளரோ, ஓட்டியோ, பணியாளர்களோ அல்லது அதில் பயணிக்கின்ற நபர்களோ சட்ட நடவடிக்கைகளிலிருந்து நழுவப்பட்டு விடுகின்றனர்.அவ்வாறு நழுவுகின்ற ஓட்டி, பணியாளர்கள், ஏனைய பயணிக்கின்ற நபர்கள் மறுதினமே வேறு கடற்றொழில் படகுகளில் தொழிலுக்குச் சென்றுவிடுகின்றனர். எனவே, அவர்களையும் குற்றவாளிகளாக சேர்த்து சட்டம் வகுக்கப்படல் வேண்டும். அவ்வாறு சட்டம் வகுக்கப்பட்டால்தான் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இயலும் என அவர்கள் தெரிவித்தனர்.  அந்த வகையில், நாமும் இது தொடர்பில் பலமுறை ஆராய்ந்து பார்த்து, தற்போது நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தில் அனுமதிப்பத்திரதாரர் என்ற பதத்திற்கு பதிலாக படகின் உரிமையாளர் என்றும், அந்தப் படகுக்கென வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தைக் கொண்டவர், படகின் ஓட்டி, அப் படகின் பணியாளர்களில் எவரேனும் உறுப்பினர், அக் குற்றம் நிகழ்த்தப்பட்ட தருவாயில் அப்படகில் இருந்த எவரேனும் நபர் உள்ளடங்களாக குற்றவாளிகளாக்கப்படுகின்ற வகையில் இத்திருத்தத்தை வகுத்துள்ளோம்.எனினும், அவர்கள், அக் குற்றம் மேற்கொள்ளப்பட்டமையானது தான் அறிந்திராத வகையில் என்றோ அல்லது, அக் குற்றம் இடம்பெறுவதைத் தடுப்பதற்கென தன்னால் உரிய அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவோ ஒப்புவிக்கப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டால், அவ்வாறு ஒப்புவிக்கப்படுகின்ற காரணிகள் நிரூபிக்கப்படுகின்ற எவரேனும் நபர் அக் குற்றத்திற்கென குற்றவாளியாகக் கருதப்படமாட்டார்.என்ற போதிலும், படகின் உரிமையாளரினை இத்தகைய குற்றங்கள் குறித்து குற்றவாளியாக்கப்பட வேண்டாம் என பலநாள் கலங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டாலும், இது தொடர்பில் அவர்கள் உயர் நீதிமன்றத்திற்குச் சென்று உயர் நீதிமன்றம் அவர்களது அக் கோரிக்கையினை நிராகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.மேற்குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு மேலாக, புதிதாக அறிமுகஞ் செய்யப்படுகின்ற இச் சட்டத்தின் ஐஐ அ பிரிவின் 14 சரத்தின் கீழ் இலங்கைக் கடற் பரப்பிற்குள் அல்லது ஆழ் கடலில் ஏதேனும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழில் செயற்பாடுகளை தடை செய்வதற்கான விதிமுறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கைக் கடற்பரப்பில் அல்லது ஆழ் கடலில் ஏதேனும் சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழிலினை மேற்கொள்கின்ற நபரொருவரின், மேற்படி கடற்றொழில் செயற்பாட்டுக்கென பயன்படுத்திய கடற்றொழில் படகானது, கடற்றொழில் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய கடற்றொழில் படகென கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால்  நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்ற சந்தர்ப்பங்களின்போது, சந்தர்ப்பத்திற்கேற்ப, அந்த நபருக்கோ அல்லது அப் படகின் உரிமையாளருக்கோ விடயங்களைத் தெளிவுபடுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், கடற்றொழில் செயற்பாட்டு அனுமதிப் பத்திரத்தினையும், தேசிய படகினை  பதிவு செய்கின்ற சான்றிதழையும் இடைநிறுத்துவதற்கு அல்லது இரத்துச் செய்வதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதுபோன்றே, கடற்றொழில் சட்டத்தின் 46வது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரமிக்க பதவி சார்ந்தோர்களது அதிகாரங்களுக்கு தடையேற்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களின்போது, படகின் நீளத்தினை கருத்தில் கொண்டு  தண்டனைக்கு உட்படுத்துவது போன்றே, படகொன்று இல்லாமல் மேற்கொள்ளப்படுகின்ற தொழில் சார்ந்த குற்றங்களின்போதும் தண்டனைக்கு உட்படுத்துவதற்கான விதிமுறைகள் இந்த திருத்தத்தின் மூலம் வகுக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த முன்மொழிவு திருத்தத்தின் மூலம் பிரதான நியதிச் சட்டத்தில் 49 ஆ மற்றும் 49 இ எனும் புதிய சரத்துகள் உட்படுத்தப்படுவதுடன், இந்த சரத்துகளின் மூலம் பிரதான நியதிச் சட்டத்தின் 14 ச சரத்து அல்லது (பிரதான நியதிச் சட்டத்தின் மூலம் வகுக்கப்பட்ட ஏதேனும் கட்டளை தவிர்ந்து) பிரதான நியதிச் சட்டத்தில் ஏதேனும் ஒழுங்குவிதிகளை மீறுகின்ற எவரேனும் நபர் தொடர்பில் இந்த சட்டத்தில் குறிப்பிடத்தக்கதாக தண்டனையொன்று குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தின்போது, தண்டனை வழங்குவதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.இந்த முன்மொழிவு திருத்தத்தின் மூலம், தற்போதைய கடற்றொழில் சட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரி என்பதற்கு கடற்றொழில் சட்டத்தின் 46 (1) உப சரத்தின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்படுகின்ற கடற்றொழில் பரிசோதகர்களின் பதவி நிலைக்குக் குறையாத அதிகாரிகளும், சார்ஜன்ட் பதவி நிலைக்குக் குறையாத இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், விமானப் படை அதிகாரிகளும், சிறு அதிகாரிகள் பதவி நிலைக்குக் குறையாத இலங்கை கடற்படையின் அதிகாரிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தத் திருத்தத்தின் மூலம் 2009 41ஆம் இலக்கத்தைக் கொண்ட கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் எவரேனும், கடலோரப் பாதுகாப்பு அதிகாரி என்ற வகையில் அதிகாரமிக்க அதிகாரி என்ற வரைவிலக்கணத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளார். அவ்வாறே, சட்டவிரோதமான, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குமுறையற்ற கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் ஓட்டி என்பதையும் வரைவிலக்கணம் செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மற்றும் ஓட்டி என்பதையும் வரைவிலக்கணம் செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.மேலும், நாம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களையும், சேர்க்கைகளையும் மேற்கொண்டு, அதனை ஒட்டுமொத்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டமாகக் கொண்டுவர உள்ளோம். அதனை ஒரு வரைபாக தற்போது துறைசார்ந்த உரித்தாளர்களின் கருத்தறிதலுக்காகவும், ஆலோசனைக்களுக்காகவும் கடற்றொழில் சார்ந்த சமூகத்தினரிடையே முன்வைத்து வருகின்றோம்.இது ஒரு வரைபு என்பதை உணராத அல்லது அறியாத ஒரு சிலர் தற்போதே பலத்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது சுயலாப அரசியல் சார்ந்த விமர்சனங்களே அன்றி வேறொன்றுமில்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்த புதிய திருத்தச் சட்ட வரைபு தொடர்பில் காழ்ப்புணர்ச்சி கொண்ட விமர்சனங்களை காற்று வாக்கில் ஊதிக் கொண்டிராமல், உங்களது ஆரோக்கியமான கருத்துக்களை எழுத்து மூலமாக எமக்குக் கையளித்தால் அவற்றையும் நாம் அந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்ட திருத்தத்தில் இணைத்துக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement