• May 06 2024

ஐந்தாண்டு காதல் தோல்வி - ரயிலின் முன் பாய்ந்து தன்னுயிரை மாய்த்த யுவதி! இலங்கையில் சோகம் samugammedia

Chithra / Aug 9th 2023, 11:08 am
image

Advertisement

 கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று  (09)  காலை தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி (வயது 28) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்

ரயிலில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்தாண்டு காதல் தோல்வி - ரயிலின் முன் பாய்ந்து தன்னுயிரை மாய்த்த யுவதி இலங்கையில் சோகம் samugammedia  கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று  (09)  காலை தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.தலவக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி (வயது 28) வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.பதுளை நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து ஹட்டன் மல்லியப்பு பகுதியில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்ரயிலில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement