• Jan 23 2025

ஹட்டனில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது!

Tharmini / Jan 23rd 2025, 3:09 pm
image

ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி, அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு சந்தேக நபர்கள், ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.

ஹட்டன் ஓயாவில் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரு குழு மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்ககல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 30-50 வயதுக்குட்பட்டவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


ஹட்டனில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி, அனுமதி இல்லாமல் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட நான்கு சந்தேக நபர்கள், ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.ஹட்டன் ஓயாவில் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒரு குழு மாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதாக ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களை கைது செய்ததோடு, மாணிக்ககல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 30-50 வயதுக்குட்பட்டவர்கள் பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement