• Jan 19 2025

சிறைச்சாலை கைதிக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற நண்பர்கள் கைது

Chithra / Jan 1st 2025, 1:24 pm
image

 

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படும் இரண்டு நண்பர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்காக நேற்றைய தினம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த மாம்பழங்களின் விதைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

08 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஆறு புகையிலை பொதிகளுமே கைப்பற்றப்பட்டுள்ளன.  

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலை கைதிக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற நண்பர்கள் கைது  காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படும் இரண்டு நண்பர்கள் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் இருவரும் திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்காக நேற்றைய தினம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.இதன்போது, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கொண்டு வந்த மாம்பழங்களின் விதைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.08 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஆறு புகையிலை பொதிகளுமே கைப்பற்றப்பட்டுள்ளன.  இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement