• May 04 2024

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Apr 30th 2023, 9:55 pm
image

Advertisement

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 310 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு. வெளியான அறிவிப்பு.samugammedia இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையை குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 340 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 333 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 375 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 365 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. அதேபோல், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 310 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 465 ரூபாவாக இருந்த நிலையில், புதிய விலை திருத்தத்துக்கு அமைய 330 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement