• Nov 22 2024

அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம்! கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Jan 4th 2024, 9:26 am
image

 

மாதாந்த சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வோ அல்லது குறைந்தபட்ச கொடுப்பனவாக 20,000 ரூபாவோ வழங்கப்படாவிட்டால், மறு அறிவித்தல் இன்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச, மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அது அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

“வற் வரி அதிகரிப்பால், பொருட்களின் விலைகள், எரிபொருள், எரிவாயு, தண்ணீர் கட்டணம் மற்றும் அனைத்து சேவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.

நாங்கள் கோரிய சம்பள உயர்வையோ அல்லது 20,000 கொடுப்பனவையோ வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம் தருகின்றோம். அதன் பின்னர், மறு அறிவித்தல் இன்றி, இந்த நிலைமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளோம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  மாதாந்த சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வோ அல்லது குறைந்தபட்ச கொடுப்பனவாக 20,000 ரூபாவோ வழங்கப்படாவிட்டால், மறு அறிவித்தல் இன்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச, மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அது அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.“வற் வரி அதிகரிப்பால், பொருட்களின் விலைகள், எரிபொருள், எரிவாயு, தண்ணீர் கட்டணம் மற்றும் அனைத்து சேவைகளின் விலைகளும் உயர்ந்துள்ளன.நாங்கள் கோரிய சம்பள உயர்வையோ அல்லது 20,000 கொடுப்பனவையோ வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம் தருகின்றோம். அதன் பின்னர், மறு அறிவித்தல் இன்றி, இந்த நிலைமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளோம் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement