• May 06 2024

இனி கவனக்குறைவாக செயல்படும் பேருந்து சாரதிகளுக்கு அரசாங்கம் வைத்த வேட்டு!!!

crownson / Dec 2nd 2022, 7:30 am
image

Advertisement

வேகமாக செல்லும் பேருந்து மற்றும் பேருந்து சாரதிகளின் கவனக்குறைவான செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் தற்போது 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு புகார் செய்யலாம்.

சட்டத்தை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் தொடர்பில் மக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் ஹொட்லைன் வசதி உள்ளது.

புகார் செய்ய விரும்புவோர் இப்போது தங்கள் குறைகளை அனுப்பலாம் மற்றும் NTC பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கலாம்.

'பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்க் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே, மக்களின் பாதுகாப்பிற்கு சவால் விடும் எதற்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்.

வேகமாக செல்லுதல், தொலைபேசி அழைத்துக் கொண்டு வாகனத்தை செலுத்துதல், வேறு வாகனங்களுடன் போட்டியிட்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சாரதிகள் மீது தாராளமாக எங்களிடம் முறைப்பாடு செய்யலாம்.' என அவர் மேலும் தெரிவித்துளார்.

இனி கவனக்குறைவாக செயல்படும் பேருந்து சாரதிகளுக்கு அரசாங்கம் வைத்த வேட்டு வேகமாக செல்லும் பேருந்து மற்றும் பேருந்து சாரதிகளின் கவனக்குறைவான செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தற்போது 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு புகார் செய்யலாம்.சட்டத்தை மீறும் பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் தொடர்பில் மக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் ஹொட்லைன் வசதி உள்ளது.புகார் செய்ய விரும்புவோர் இப்போது தங்கள் குறைகளை அனுப்பலாம் மற்றும் NTC பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கலாம். 'பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்க் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். எனவே, மக்களின் பாதுகாப்பிற்கு சவால் விடும் எதற்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம். வேகமாக செல்லுதல், தொலைபேசி அழைத்துக் கொண்டு வாகனத்தை செலுத்துதல், வேறு வாகனங்களுடன் போட்டியிட்டு செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சாரதிகள் மீது தாராளமாக எங்களிடம் முறைப்பாடு செய்யலாம்.' என அவர் மேலும் தெரிவித்துளார்.

Advertisement

Advertisement

Advertisement