• Apr 23 2025

முக்கிய அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற அரசு திட்டம்

Chithra / Mar 7th 2025, 1:09 pm
image


இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக அஞ்சல் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அத்துடன் நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


முக்கிய அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்ற அரசு திட்டம் இலங்கையின் முக்கிய நகரங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்காக அஞ்சல் துறையின் கீழ் ஒரு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய பகுதிகளிலுள்ள அஞ்சல் நிலையங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement