• May 06 2024

இலங்கையில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - அமெரிக்காவின் புதிய திட்டம் samugammedia

Chithra / Apr 20th 2023, 10:03 am
image

Advertisement

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மின்கலங்களை மாற்றும் இரண்டு நிலையங்களை இலங்கையில் அமைக்க USAID தீர்மானித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையில், USAID எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமும் இலங்கையின் தனியார் நிறுவனமொன்றும் 18ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.


இந்த உடன்படிக்கையின் கீழ், மின்கலங்களை மாற்றும் நிலையங்களை கொழும்பில் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் அவற்றின் மின்கலங்களுக்கு மின்னேற்றப்படும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இன்றி, மின்னற்ற கலங்களை இந்த நிலையங்களில் கொடுத்து மின்னேற்றப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.


சரியான நேரத்தில் சேவைகளை வழங்குதல், செலவைக் குறைத்தல் மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக மின்சார இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 20 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்த நிதியுதவியின் ஊடாக நாட்டில் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சி அறிவிப்பு - அமெரிக்காவின் புதிய திட்டம் samugammedia மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மின்கலங்களை மாற்றும் இரண்டு நிலையங்களை இலங்கையில் அமைக்க USAID தீர்மானித்துள்ளது.இதற்கான உடன்படிக்கையில், USAID எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனமும் இலங்கையின் தனியார் நிறுவனமொன்றும் 18ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கையின் கீழ், மின்கலங்களை மாற்றும் நிலையங்களை கொழும்பில் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.மின்சார வாகனங்களை பயன்படுத்துவோர் அவற்றின் மின்கலங்களுக்கு மின்னேற்றப்படும் வரை காத்திருக்க வேண்டிய தேவை இன்றி, மின்னற்ற கலங்களை இந்த நிலையங்களில் கொடுத்து மின்னேற்றப்பட்டவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.சரியான நேரத்தில் சேவைகளை வழங்குதல், செலவைக் குறைத்தல் மற்றும் சூழலுக்கு பாதுகாப்பான முறையில் விநியோகம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக மின்சார இருசக்கர வாகன ஓட்டுநர்கள் 20 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.இந்த நிதியுதவியின் ஊடாக நாட்டில் மின்சார வாகன மின்னேற்ற நிலையங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement