• May 01 2024

யாழ். நல்லூரில் பெறுமதியான பொருட்களை தவறவிட்ட மக்களுக்கு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Sep 20th 2023, 10:59 am
image

Advertisement

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது, தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.

இவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.


யாழ். நல்லூரில் பெறுமதியான பொருட்களை தவறவிட்ட மக்களுக்கு மாநகர சபையின் முக்கிய அறிவிப்பு samugammedia  நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது, தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலன் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  நல்லூர் மகோற்சவ திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள், மணிக்கூடு, தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள் என்பன யாழ்ப்பாணம் மாநகர சபையின் உற்சவகாலப் பணிமனையில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மாநகர சபை அலுவலகத்தில் உள்ளன.இவற்றின் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி மாநகர சபையின் நிர்வாக கிளையில் பிற்பகல் 2.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

Advertisement

Advertisement

Advertisement