• Nov 24 2025

அதிகூடிய மழை வீழ்ச்சி யாழில் பதிவு - எதிர்வரும் 27 வரை மழை நீடிக்க வாய்ப்பு!

Chithra / Nov 18th 2025, 9:38 am
image


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள்  கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்  101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

யாழ். மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி  காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் இன்று செவ்வாய்க்கிழமை வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்வு கூறல்கள் விடுக்கப்பட்டுள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது.

கடற்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என தெரிவித்தார். 


அதிகூடிய மழை வீழ்ச்சி யாழில் பதிவு - எதிர்வரும் 27 வரை மழை நீடிக்க வாய்ப்பு இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள்  கிடைக்கப்பெற்ற அதிகூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்  101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.யாழ். மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி  காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.மேலும் இன்று செவ்வாய்க்கிழமை வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்வு கூறல்கள் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது  எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்  உள்ளது.கடற்தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement