திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம். தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
நிறைவேற்றுத்துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகிய மூன்று தூண்களும் சமநிலையாக செயற்படவேண்டும் என நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால் அது செயற்பாட்டில் வரும் காலம் வரும்வரை நாங்கள் பார்த்திருந்தாேம்.
ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியின் கீழே இந்த மூன்று துறைகளும் சமநிலையாக செயற்பட இடமளிக்கப்பட்டிருக்கிறது.
ஏனெனில் ஜேஆர், உயர்நீதிமன்ற நீதியர்களுக்கு கள் எறிந்தார். அவ்வாறு எந்த சம்பவமாவது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கிறதா?
அதேபோன்று நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பசில்ராஜபக்ஷ்வின் வழக்கை கையாண்டுவந்த சட்டத்தரணியை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்தார்.
அதன்பின்னர் திவிநெகும வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு சார்ப்பாக தீர்ப்பெழுதவில்லை என்பதறக்காக பிரதமர நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவை விரட்டினார்கள். அதன் பின்னர் செலான் வங்கியின் தலைவரை உயர்நீதிமன்ற ஆசனத்தில் அமர்த்தினார்கள்.இவர்கள்தான் இன்று நீதிமன்ற சுயாதினம் தொடர்பில் கதைக்கின்றனர்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை எவ்வாறு வழிநடத்தினார்கள், நீதிமன்ற சுயாதீனத்தன்மையை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்போதுதான நீதிமன்ற நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்கிறது. அதில் யாருக்கும் அழுத்தங்கள் கொடுக்க முடியாது.
திருகோணமலை சம்பவத்தை ஒருசிலர் இனவாதமாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது. தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும்.
அதனால் அந்த நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை, எனவே இந்த சம்பவத்தை இனவாத, மதவாதமாக மாற்ற வேண்டாம். என தெரிவித்தார்.
திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம் - எச்சரிக்கும் பிரதி அமைச்சர் சுனில் திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம். தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.நிறைவேற்றுத்துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகிய மூன்று தூண்களும் சமநிலையாக செயற்படவேண்டும் என நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால் அது செயற்பாட்டில் வரும் காலம் வரும்வரை நாங்கள் பார்த்திருந்தாேம். ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியின் கீழே இந்த மூன்று துறைகளும் சமநிலையாக செயற்பட இடமளிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஜேஆர், உயர்நீதிமன்ற நீதியர்களுக்கு கள் எறிந்தார். அவ்வாறு எந்த சம்பவமாவது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கிறதாஅதேபோன்று நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் பசில்ராஜபக்ஷ்வின் வழக்கை கையாண்டுவந்த சட்டத்தரணியை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்தார். அதன்பின்னர் திவிநெகும வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு சார்ப்பாக தீர்ப்பெழுதவில்லை என்பதறக்காக பிரதமர நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவை விரட்டினார்கள். அதன் பின்னர் செலான் வங்கியின் தலைவரை உயர்நீதிமன்ற ஆசனத்தில் அமர்த்தினார்கள்.இவர்கள்தான் இன்று நீதிமன்ற சுயாதினம் தொடர்பில் கதைக்கின்றனர்.அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை எவ்வாறு வழிநடத்தினார்கள், நீதிமன்ற சுயாதீனத்தன்மையை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போதுதான நீதிமன்ற நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்கிறது. அதில் யாருக்கும் அழுத்தங்கள் கொடுக்க முடியாது. திருகோணமலை சம்பவத்தை ஒருசிலர் இனவாதமாக்க முயற்சிக்கின்றனர். அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது. தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் அந்த நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை, எனவே இந்த சம்பவத்தை இனவாத, மதவாதமாக மாற்ற வேண்டாம். என தெரிவித்தார்.