• Jan 10 2025

ஹிலாரி கிளிண்டன் மற்றும் மெஸ்சிக்கு : அமெரிக்காவின் உயரிய விருது!

Tharmini / Jan 5th 2025, 3:31 pm
image

அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.  

இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். 

விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. 

பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.



ஹிலாரி கிளிண்டன் மற்றும் மெஸ்சிக்கு : அமெரிக்காவின் உயரிய விருது அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவிகாலம் வருகிற 20-ந்தேதி முடிகிறது. அன்று தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் புதிய அதிபராக பதவியேற்கிறார்.  இந்த நிலையில் அமெரிக்காவின் உயரிய குடிமகன் விருதான அதிபர் சுதந்திரப் பதக்க விருதுக்கு 19 பேரை அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முதலீட்டாளர் ஜார்ஜ் சொரோஸ், முன்னணி கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி, ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மறைந்த ஆஷ்டன் கார்ட்டர் உள்பட 19 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் விருதுகளை ஜோபைடன் வழங்கினார். விருது பெற்ற ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார். அவரது பொது சேவைக்காக இவ்விருது வழங்கப்பட்டது. பிரபல முதலீட்டாளரான 94 வயது ஜார்ஜ் சொரோஸ் விழாவில் பங்கேற்கவில்லை. விருதை அவரது மகன் அலெக்ஸ் சொரோஸ் தனது தந்தையின் சார்பாக ஏற்றுக் கொண்டார். இதுதொடர்பாக ஜார்ஜ் சொரோஸ் கூறும்போது, `அமெரிக்காவில் சுதந்திரத்தையும் செழிப்பையும் கண்ட ஒரு புலம்பெயர்ந்தவர் என்ற முறையில், இந்த மரியாதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement