• May 04 2024

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; வெளியானது உயிரிழந்த 7 பேரின் விபரம்..! இரு போட்டியாளர்கள் கைது!

Chithra / Apr 22nd 2024, 9:12 am
image

Advertisement

 

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதுடன், விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் சீதுவ, ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் அடங்குவார்.

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

மேலும், மாத்தறை, ராகுல வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும், மாத்தறை, கொடகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரும்  உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர் அக்குரஸ்ஸ, வளவ்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; வெளியானது உயிரிழந்த 7 பேரின் விபரம். இரு போட்டியாளர்கள் கைது  தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரண்டு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று பிற்பகல் இடம்பெற்ற கார் பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதுடன், விபத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்தவர்களில் வெலிமடை மற்றும் டயரபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவர் 55 வயதுடையவர் என்பதுடன் விபத்தில் உயிரிழந்த 8 வயது சிறுமியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் சீதுவ, ராஜபக்சபுர பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் அடங்குவார்.அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.மேலும், மாத்தறை, ராகுல வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரும், மாத்தறை, கொடகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரும்  உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன், அவர் அக்குரஸ்ஸ, வளவ்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, விபத்தில் காயமடைந்த மூவர் பதுளை பொது வைத்தியசாலையிலும், ஏனையவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement