• Jan 24 2025

பெற்றோர்களின் அர்ப்பணிப்பை நான் நன்கு அறிவேன் : அவர்களுக்கு சேவை செய்து வாழ விரும்புகிறேன் - அபிலாஷ்

Tharmini / Dec 26th 2024, 10:51 am
image

2004 ஆம் ஆண்டு இதே நாளில், சுமத்ரா தீவின் மேற்கே இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஒரு பேரழிவுகரமான சுனாமியைத் தூண்டியது, இது தாய்லாந்திலிருந்து ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை மூழ்கடித்து 200,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது.

இவ்வாறான நிலையில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் இருந்தும் ஓர் பார்வை திரும்பியது.

அதுவே சுனாமி பேபி 81 எனும் குழந்தை, யார் இந்த ஜெய ராசா அபிலாஷ் ? , கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது (2004.12.26) அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலபட்டது.

இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.

இந்த குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். 

பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.

இக் குழந்தை எங்களுடையது ஒன்பது தாய்மார் போராடிய நிலையில் ,ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

பின்னர், 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே ஜெயராசா அபிலாஷ் என நிரூபணமாகியது.

பின்னர் அந்த பிஞ்சு குழந்தை தாய், தந்தையரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் அபிலாஷ் வசித்து வருவதுடன், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியும் செலுத்தினார்.







பெற்றோர்களின் அர்ப்பணிப்பை நான் நன்கு அறிவேன் : அவர்களுக்கு சேவை செய்து வாழ விரும்புகிறேன் - அபிலாஷ் 2004 ஆம் ஆண்டு இதே நாளில், சுமத்ரா தீவின் மேற்கே இந்தியப் பெருங்கடலின் அடிப்பகுதியில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ஒரு பேரழிவுகரமான சுனாமியைத் தூண்டியது, இது தாய்லாந்திலிருந்து ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை மூழ்கடித்து 200,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றது.இவ்வாறான நிலையில் இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் இருந்தும் ஓர் பார்வை திரும்பியது.அதுவே சுனாமி பேபி 81 எனும் குழந்தை, யார் இந்த ஜெய ராசா அபிலாஷ் , கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது (2004.12.26) அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலபட்டது.இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ்.இந்த குழந்தை என்னுடையது என்னுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது.இக் குழந்தை எங்களுடையது ஒன்பது தாய்மார் போராடிய நிலையில் ,ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.பின்னர், 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர்களின் புதல்வனே ஜெயராசா அபிலாஷ் என நிரூபணமாகியது.பின்னர் அந்த பிஞ்சு குழந்தை தாய், தந்தையரிடம் ஒப்படைக்கப்பட்டது.மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தில் அபிலாஷ் வசித்து வருவதுடன், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியும் செலுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now