• May 18 2024

முடிந்தால் என்னை தோற்கடித்து காட்டுங்கள்! நாமல் பகிரங்க சவால்

Chithra / Dec 12th 2022, 10:07 am
image

Advertisement

ராஜபக்சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

யூடியூப் பக்கம் ஒன்றின் நேர்காணலில் பங்குபற்றிய நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். 

ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலில் நின்று மக்களின் வாக்கு மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டத்தின் மூலம் நாடு அராஜகம் செய்வதும் விடுதலை புலிகள் அமைப்பினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான்.

முழு உலகமும் கொவிட் தொற்றினால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி அந்த சவாலில் இருந்து மீள முயற்சிக்கும் வேளையில், சிலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து எடுக்க முடியாத அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் போராட்டங்கள் யாருக்காக? என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களிடம் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மாற்று வழியை முன்வைக்கத் தவறிய போராட்டக்காரர்கள், ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணை இல்ல என கூறுகின்றார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றிய போதிய அறிவில்லை என்பது தெளிவாகியுள்தென நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அன்றிலிருந்து இன்று வரையிலும், எதிர்காலத்திலும் ராஜபக்சர்கள், இந்த நாட்டையும், பொது மக்களையும் மிகவும் நேசிப்பதாகவும், இதனை யாராலும் அல்லது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முடிந்தால் என்னை தோற்கடித்து காட்டுங்கள் நாமல் பகிரங்க சவால் ராஜபக்சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பகிரங்க சவால் விடுத்துள்ளார்.யூடியூப் பக்கம் ஒன்றின் நேர்காணலில் பங்குபற்றிய நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பின் பிரகாரம், தேர்தலில் நின்று மக்களின் வாக்கு மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பெற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், போராட்டத்தின் மூலம் நாடு அராஜகம் செய்வதும் விடுதலை புலிகள் அமைப்பினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான்.முழு உலகமும் கொவிட் தொற்றினால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி அந்த சவாலில் இருந்து மீள முயற்சிக்கும் வேளையில், சிலர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து எடுக்க முடியாத அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் போராட்டங்கள் யாருக்காக என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களிடம் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பினார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் மாற்று வழியை முன்வைக்கத் தவறிய போராட்டக்காரர்கள், ஜனாதிபதிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆணை இல்ல என கூறுகின்றார்கள்.இதன் மூலம் அவர்களுக்கு அரசியலமைப்பு பற்றிய போதிய அறிவில்லை என்பது தெளிவாகியுள்தென நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.அன்றிலிருந்து இன்று வரையிலும், எதிர்காலத்திலும் ராஜபக்சர்கள், இந்த நாட்டையும், பொது மக்களையும் மிகவும் நேசிப்பதாகவும், இதனை யாராலும் அல்லது எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement