• May 06 2024

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடனான இலங்கையின் கலந்துரையாடல்களுக்கு IMF, ஆதரவு..!!

Tamil nila / Apr 20th 2024, 10:49 pm
image

Advertisement

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடனான  இலங்கையின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாகவும் கொள்கை ரீதியில் தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் முறையான மதிப்பீட்டை வழங்குமென்றும், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்தின ஒத்துழைப்புத் திட்டத்தின் அளவுகோல்களுடன் இணக்கமான ஒப்பந்தம் இருக்குமென தாம் நம்புவதாக தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ கடனாளிகளினது செயற்பாடுகளின்

தேவைகளின் ஒப்பீட்டுத்தன்மை திட்டத்தின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்க முன்னர் இதனை விரைவில் அடையக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வார தொடக்கத்தில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடன் உடன்பாட்டை எட்டத் தவறியதாக இலங்கை தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில் இலங்கை தனது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் மூன்றாவது தவணையை பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடுமென்ற கவலையையும் வெளிப்படுத்தியிருந்தது.

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர், திட்டத்தின் ‘அடிப்படை அளவுருக்கள்’, அதன் நாணய நிதியத் திட்டத்தின் உள்ளடகத்துடன் பொருந்தவில்லையென்பது முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்றாகுமென அரசாங்கம் தெரிவித்திருந்தது.

“இரு தரப்பினரும் தமது கலந்துரையாடல்களை விரைவாக தொடர நாம் ஊக்குவிக்கிறோம்” என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடனான இலங்கையின் கலந்துரையாடல்களுக்கு IMF, ஆதரவு. சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடனான  இலங்கையின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளதாகவும் கொள்கை ரீதியில் தற்காலிக உடன்பாட்டை எட்டிய பின்னர் முறையான மதிப்பீட்டை வழங்குமென்றும், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.நாணய நிதியத்தின ஒத்துழைப்புத் திட்டத்தின் அளவுகோல்களுடன் இணக்கமான ஒப்பந்தம் இருக்குமென தாம் நம்புவதாக தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ கடனாளிகளினது செயற்பாடுகளின்தேவைகளின் ஒப்பீட்டுத்தன்மை திட்டத்தின் கீழ் இரண்டாவது மதிப்பாய்வை முடிக்க முன்னர் இதனை விரைவில் அடையக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.இவ்வார தொடக்கத்தில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க சர்வதேச கடனீட்டு பத்திரதாரர்களுடன் உடன்பாட்டை எட்டத் தவறியதாக இலங்கை தெரிவித்திருந்தது. ஜூன் மாதத்தில் இலங்கை தனது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் மூன்றாவது தவணையை பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடுமென்ற கவலையையும் வெளிப்படுத்தியிருந்தது.சர்வதேச கடனீட்டு பத்திரதாரர், திட்டத்தின் ‘அடிப்படை அளவுருக்கள்’, அதன் நாணய நிதியத் திட்டத்தின் உள்ளடகத்துடன் பொருந்தவில்லையென்பது முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்றாகுமென அரசாங்கம் தெரிவித்திருந்தது.“இரு தரப்பினரும் தமது கலந்துரையாடல்களை விரைவாக தொடர நாம் ஊக்குவிக்கிறோம்” என சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement