• May 18 2024

பாப்பரசரின் உடல்நிலையில் முன்னேற்றம்- வத்திகான் அறிவிப்பு! samugammedia

Sharmi / Mar 30th 2023, 10:17 pm
image

Advertisement

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அவர் வைத்தியசாலையிலிருந்து பணியாற்றுகிறார் எனவும் வத்திகான் இன்று தெரிவித்துள்ளது.

86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினை காரணமாக, ரோம் நகரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக வத்திகான் தெரிவித்தள்ளது.

வத்திகான் பேச்சாளர் மெத்தேயோ புரூனி இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில்,

"பாப்பரசர் இரவு நன்றாக ஓய்வெடுத்தார். அவரின் மருத்துவ விடயங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார். திட்டமிடப்பட்ட சிகிச்சைகளை அவர்  தொடர்ந்தும் பெறுகிறார். இன்று காலை, காலை உணவின் பின்னர் சில பத்திரிகைகளை அவர் வாசித்ததுடன், பணிகளையும் ஆரம்பித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் உடல்நிலையில் முன்னேற்றம்- வத்திகான் அறிவிப்பு samugammedia வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அவர் வைத்தியசாலையிலிருந்து பணியாற்றுகிறார் எனவும் வத்திகான் இன்று தெரிவித்துள்ளது.86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினை காரணமாக, ரோம் நகரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக வத்திகான் தெரிவித்தள்ளது. வத்திகான் பேச்சாளர் மெத்தேயோ புரூனி இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், "பாப்பரசர் இரவு நன்றாக ஓய்வெடுத்தார். அவரின் மருத்துவ விடயங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார். திட்டமிடப்பட்ட சிகிச்சைகளை அவர்  தொடர்ந்தும் பெறுகிறார். இன்று காலை, காலை உணவின் பின்னர் சில பத்திரிகைகளை அவர் வாசித்ததுடன், பணிகளையும் ஆரம்பித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement