• May 05 2024

முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவு வளாகம் திறந்துவைப்பு...!samugammedia

Sharmi / Nov 23rd 2023, 7:38 am
image

Advertisement

மாவீரர் நாளினை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர்கள் நினைவு சுமந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப்பலகைகள் வைக்கப்பட்ட நினைவு வளாகம் நேற்றையதினம்(22)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு நிகழ்வுவில் மாவீரர் நினைவாக பொதுச்சுடரினை முன்னாள் மாணவர்கள்போராளியும் மாவீரரின் சகோதரரும் ஏற்றிவைக்க மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட பெயர்கள் தாங்கிய நினைவு பலகைக்கான சுடரினை மாவீரரின் பெற்றோர் ஒருவர் ஏற்றிவைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெயர் பலகையினை சட்டத்தரணி வி.மணிவண்ணன் திறந்து வைக்க ஏனை மாவீரர்களின் பெயர் பலகையினை சம்பிரதாயபூர்வாக மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.

25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் வீரச்சாவடைந்த ஆண்டுகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மக்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.




முள்ளியவளையில் மாவீரர்கள் பெயர்கள் தாங்கிய நினைவு வளாகம் திறந்துவைப்பு.samugammedia மாவீரர் நாளினை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர்கள் நினைவு சுமந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 25ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுப்பலகைகள் வைக்கப்பட்ட நினைவு வளாகம் நேற்றையதினம்(22)திறந்து வைக்கப்பட்டுள்ளது.திறப்பு நிகழ்வுவில் மாவீரர் நினைவாக பொதுச்சுடரினை முன்னாள் மாணவர்கள்போராளியும் மாவீரரின் சகோதரரும் ஏற்றிவைக்க மாவீரர்கள் நினைவாக அமைக்கப்பட்ட பெயர்கள் தாங்கிய நினைவு பலகைக்கான சுடரினை மாவீரரின் பெற்றோர் ஒருவர் ஏற்றிவைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பெயர் பலகையினை சட்டத்தரணி வி.மணிவண்ணன் திறந்து வைக்க ஏனைய மாவீரர்களின் பெயர் பலகையினை சம்பிரதாயபூர்வாக மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் வீரச்சாவடைந்த ஆண்டுகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மக்களுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement