• May 06 2024

அதிகரித்துள்ள கறவை மாடுகள் திருட்டு - பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் samugammedia

Chithra / Apr 19th 2023, 7:51 am
image

Advertisement

கம்பஹா மாவட்டத்தில் தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மாடுகள் திருடப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த மாடுகள் நாளொன்றுக்கு 15-30 லீற்றர் வரை பால் கொடுக்கும் பசுக்கள் எனவும், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 35-40 பசுக்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான விவசாய அதிகாரிகளுடனான கலந்துரையாடலில், மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு தொடர்பான விபரங்களை மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் முன்வைத்தனர்.


இக்கலந்துரையாடலில், சொகுசு வான்களில் வருபவர்கள், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ள பால்மாக்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அத்துடன் தீவின் மற்ற பகுதிகளில் மாடு திருட்டு அதிகரித்து வருவதாக அனைத்து விவசாய அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இரவு ரோந்து, வாகன சோதனை அதிகரிப்பு மற்றும் பசு திருடர்களுக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தற்போது வழங்கப்படும் தண்டனை அதிகரிப்பு தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்புமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


தினமும் இவ்வாறு கறவை மாடுகள் திருடப்படுவதால், எதிர்காலத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாடு மேலாண்மையில் ஈடுபடும் பால் பண்ணையாளர்கள் பெருமளவு பணம் செலவழித்து மாடுகளின் பாதுகாப்பிற்காக சில மாட்டுத் தொழுவங்களில் சிசிடிவி கமராக்களையும் பொருத்தியுள்ளனர் என்பதும் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்துள்ள கறவை மாடுகள் திருட்டு - பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் samugammedia கம்பஹா மாவட்டத்தில் தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மாடுகள் திருடப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாடுகள் நாளொன்றுக்கு 15-30 லீற்றர் வரை பால் கொடுக்கும் பசுக்கள் எனவும், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 35-40 பசுக்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான விவசாய அதிகாரிகளுடனான கலந்துரையாடலில், மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு தொடர்பான விபரங்களை மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் முன்வைத்தனர்.இக்கலந்துரையாடலில், சொகுசு வான்களில் வருபவர்கள், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ள பால்மாக்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அத்துடன் தீவின் மற்ற பகுதிகளில் மாடு திருட்டு அதிகரித்து வருவதாக அனைத்து விவசாய அதிகாரிகளும் தெரிவித்தனர்.இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இரவு ரோந்து, வாகன சோதனை அதிகரிப்பு மற்றும் பசு திருடர்களுக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தற்போது வழங்கப்படும் தண்டனை அதிகரிப்பு தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்புமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.தினமும் இவ்வாறு கறவை மாடுகள் திருடப்படுவதால், எதிர்காலத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாடு மேலாண்மையில் ஈடுபடும் பால் பண்ணையாளர்கள் பெருமளவு பணம் செலவழித்து மாடுகளின் பாதுகாப்பிற்காக சில மாட்டுத் தொழுவங்களில் சிசிடிவி கமராக்களையும் பொருத்தியுள்ளனர் என்பதும் இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement